"தமிழ் சினிமா நல்லாருக்கு.. விட்ருங்கப்பா" - KGF 2 விஷயத்தில் CV குமார் போட்ட LIST

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான CV குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Producer C V kumar viral post KGF 2 social media Josh
Advertising
>
Advertising

Also Read | ”காத்துவாக்குல ரெண்டு காதல்”… மற்ற மொழிகளில் படத்தின் title இதுதான்! வெளியான செம்ம தகவல்!

கேஜிஎஃப் 2 வெற்றி….

கடந்த வாரம் வியாழக்கிழமை ஏப்ரல் 14 ஆம் தேதி கிட்டத்தட்ட 10,000 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியானது. கேஜிஎஃப் 2 திரைப்படம் , முதல் வாரம் கடந்து இரண்டாவது வாரத்திலும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் CV குமாரின் வைரல் பதிவு…

இந்த படத்தின் வெற்றியை அடுத்து கேஜிஎஃப் 2 படத்தைப் புகழ்ந்தும் தமிழ் படங்களை மட்டம் தட்டுவது போலவும் மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்கள் சமூகவலைதளத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக பீட்சா, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட ஏராளமான படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் CV குமார் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அதில் “ஓரு முள்ளும் மலரும், கல்யாண பரிசு, காதலிக்கநேரமில்லை, recently ஆடுகளம், சூதுகவ்வும், முண்டாசுபட்டி, சதுரங்கவேட்டை, ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை, மெட்ராஸ், க க போ, விக்ரம் வேதா, தீரன் அதிகாரம் ஒன்று, இறுதிசுற்று, வடசென்னை, ராட்சசன், அசுரன், பரியேறும் பெருமாள், கைதி, சார்பேட்டா பரம்பரை, ஜெய்பீம், டாணாக்காரன் இதெல்லாத்தையும் விட இந்த mass masala கோலார் தங்க வயல் தான் best of best ணா தமிழ் சினிமா நல்லாவே இருக்குப்பா. தயவு செய்து விட்ருங்கப்பா

குறிப்பு : இது ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். ஆனால் நம்மிடையே இருக்கும் மாஸ்டர்பீஸ் படங்களுக்கு இணையானது இல்லை என நான் நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Also Read | RRR நாயகி ஆலியா பட் கலக்கிய ‘கங்குபாய்’ OTT ரிலீஸ் அறிவிப்பு … எப்போ? எதுல?

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Producer C V kumar viral post KGF 2 social media Josh

People looking for online information on Kgf 2, Producer C V kumar, Producer C V kumar viral post KGF 2 will find this news story useful.