"எந்த சூரியனும்".. மகன்களின் வெற்றி தருணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நெகிழ்ச்சி பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களின் ஸ்போர்ட்ஸ் தினத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.

Image Credit : Aishwarya Rajinikanth | Instagram 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பமும் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

லால் சலாம் படத்தின் பூஜை நடைபெற்றிருந்த சூழலில் இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது. தொடர்ந்து, இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இருந்த வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். திரைப்பட வேலைகளில் மூழ்கி இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், மற்றொருபக்கம் ஆன்மீக பயணங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

Image Credit : Aishwarya Rajinikanth | Instagram

இந்த சூழ்நிலையில், தனது மகன்களின் பள்ளியில் நடைபெற்ற ஸ்போர்ட்ஸ் தின விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டிருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்,"எந்த சூரியனும்.. இந்த குழந்தைகளின் விளையாட்டு மீதான உற்சாகத்தை நிறுத்த முடியாது. காலை ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் ஓடுகிறார்கள். என் மகன்களின் பிரகாசத்தை கண்டு புன்னகைத்தபடி நான் நின்றுகொண்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதனுடன் தனது மகன்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

 

தொடர்புடைய இணைப்புகள்

Producer Aiswarya Rajinikanth attend son Sports day

People looking for online information on Aishwarya Rajinikanth, Son, Sports Day will find this news story useful.