கடந்த பிக்பாஸ் நான்காவது சீசன் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா பங்கேற்றிருந்தார். அறந்தாங்கி நிஷாவிற்கும் பிக்பாஸ்க்கும் ஒரு ‘ராப்போ’ இருந்ததை அந்த ஷோவில் காணமுடிந்தது.
இந்த நிலையில் இதை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா, “போன சீசனில் நிஷாவை எப்படி வெச்சிருந்தீங்க? அந்த லெவலில் வச்சிருந்தீங்க. எங்களுக்கு தெரியும். இந்த சீசனில் அப்படியே அங்கிருந்து நமீதாவுக்கு தாவிட்டீங்களே பிக்பாஸ்” என்றெல்லாம் கூறி அதிர வைத்துள்ளார்.
மேலும் நமீதா மாரிமுத்து, பிக்பாஸுக்கு கண்மணி என்று செல்லப் பெயர் வைத்திருந்ததை கலாய்க்கும் விதமாக, பிக்பாஸ் வீட்டு கேமராவுக்கு முன்பாக வந்து நின்று மணியை ஆட்டிக் காட்டிவிட்டுச் செல்கிறார் பிரியங்கா.
இப்படி பிக்பாஸில் பிரியங்கா வந்துபோகும் காட்சிகள் பலருக்கும் ஜாலியாக இருக்கின்றன. அவ்வப்போது பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு எழுவதற்கு முக்கியமான காரணமாக விளங்கும் பிரியங்கா, விஜய் டிவியில் விஜேவாக இருந்ததை அடுத்து பலருக்கும் பிடித்தமானவராக வலம் வருகிறார்.
இதனைத் தொடர்ந்து பாத்திரம் கழுவிக்கொண்டே பேசிய பிரியங்கா, “பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போது காலடி எடுத்து வைத்தேனோ.. அப்போதே இனி நான் விஜய் டிவிக்கு போகப் போவதில்லை என்பது தெரிந்து விட்டது. அத்துடன் இன்னும் ஒரு வருடத்துக்கு வேற எந்த சேனலுக்கும் போகக்கூடாது என்று அக்ரிமென்டில் கையெழுத்து வாங்கி விட்டார்கள்” என புலம்புகிறார் பிரியங்கா.
அதேசமயம், “ஆனா யூடியூப் சேனலில் பணிபுரியலாம்ல?” என்று அவரே சமாதானம் செய்து கொள்கிறார். இப்படி பிரியங்காவின் சேட்டைகளும் குறும்புத்தனமும் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.