பனாரஸ் பட்டுச்சேலையில் ஜொலித்த பிரியங்கா அருள் மோகன்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரியங்கா மோகன்  தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல  தமிழ் ஹீரோ ஜெயம் ரவியுடன் ராஜேஷ் இயக்கும் படத்தில் ஜோடி சேர உள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் அறிமுகமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

பிரியங்கா மோகன், தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளை கவனித்துக் கொள்கிறது.

நடிகை பிரியங்கா மோகன் பிரான்ஸ் நாட்டின் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு தற்போது இந்தியா திரும்பி உள்ளார். நேற்று துல்கர் சல்மான் உடன் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த விளம்பரம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பிரபல போட்டோகிராபர் அருண் பிரசாத் உடன் இணைந்து புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ளார். Ivory நிறத்தில் பட்டுப் புடவை  அணிந்து இந்த போட்டோ ஷூட்டில் தோன்றியுள்ளார். 

இந்த பட்டுப் புடவை சாந்தி பனாரஸ் நிறுவனம் வடிவமைத்தது. அமரபள்ளி ஜூவல்லர்ஸ் இந்த நகைகளை வடிவமைத்துள்ளார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Mohan Latest Photoshoot with Banaras Silk Saree

People looking for online information on Priyanka Arul Mohan, Priyanka Mohan will find this news story useful.