தனியே தன்னந்தனியே.. லண்டனில் உள்ள பூங்காவில் பிரியங்கா மோகன்.. செம வைரலாகும் THROWBACK போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரியங்கா மோகன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் எடுத்த தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | EXCLUSIVE: "அஜித் கிட்ட இந்த கேள்வி கேக்கனும்".. விஜய் என் தம்பி..! மனம் திறந்த ஆமிர் கான்!

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோ ஜெயம் ரவியுடன் ஜோடி சேர உள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் அறிமுகமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

பிரியங்கா மோகன், தற்போது 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளை கவனித்துக் கொள்கிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில்  அமைந்துள்ள Hyde Park Corner பூங்காவில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனியாக புல் தரையில் அமர்ந்து நீல நிற உடையில் நவநாகரீக தோற்றத்தில் பிரியங்கா மோகன் காட்சியளிக்கிறார்.

Also Read | பிரபல மலையாள முன்னணி நடிகருக்கு ஜோடியான த்ரிஷா.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Mohan LATEST Photos from London Hyde Park Corner

People looking for online information on London Hyde Park Corner, Priyanka Mohan, Priyanka Mohan LATEST Photos will find this news story useful.