BEHINDWOODS விருது மேடையில் நம்ம 'மெழுகு DOLL' நடிகை PRIYANKA MOHAN..‌ வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

Also Read | பாடிக் கொண்டிருக்கும் போதே சுருண்டு விழுந்து.. உயிரிழந்த பிரபல பாடகர்..

இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது மேடையில் கால் பதித்திருந்தனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் விருதுகளையும் வென்று அசத்தி இருந்தனர். அந்த வகையில், இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன், இசை அமைப்பாளர் அனிருத், நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர், விருது வென்றிருந்த வீடியோக்கள், ஏற்கனவே "Behindwoods TV" யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகி ட்ரெண்டிங்கிலும் இருந்தது.

விருது வென்ற பிரியங்கா மோகன்

இந்நிலையில், நடிகை பிரியங்கா மோகன் விருது வென்ற வீடியோ, தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம், வேகமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன். Behindwoods கோல்டு மெடல்ஸ் விருதுகள் மேடையில், "Best Actor Critics Choice - Female Tamil" என்ற விருதினை டாக்டர் படத்திற்காக பிரியங்கா மோகன் வென்றிருந்தார். இதனை இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆகியோர் வழங்கி இருந்தனர்.

விருது வென்ற பின், தொடர்ந்து பேசிய பிரியங்கா மோகன், "யுவன் சார் கையில் இருந்து விருது வாங்கியது, மிக பெருமையாக இருக்கிறது. அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல, டாக்டர் மற்றும் டான் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு மிகப் பெரிது. அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. மேலும், எனக்கு வாய்ப்பு கொடுத்த டாக்டர் படக்குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.

செல்லம்மா பாடலுக்கு செம க்யூட் டான்ஸ்

தொடர்ந்து, தனது Hobby குறித்து பேசிய பிரியங்கா மோகன், "படங்கள் பார்ப்பது பிடிக்கும். அதே போல, ஓவியங்களையும் அதிகம் ரசிப்பேன்" என கூறினார். அதே போல, டாக்டர் படத்தில் வரும் செல்லம்மா பாடலுக்கும், தொகுப்பாளர் பிரியங்காவுடன் இணைந்து நடனமாடி இருந்தார் பிரியங்கா மோகன். அதிலும், அவரின் க்யூட் ரியாக்ஷன்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்திருந்தது.

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Also Read | "இத எப்படி நான் மிஸ் பண்ணேன்?!".. மகேஷ் பாபு குறித்து ஆனந்த் மஹிந்திரா செய்த 'வைரல்' ட்வீட்..

BEHINDWOODS விருது மேடையில் நம்ம 'மெழுகு DOLL' நடிகை PRIYANKA MOHAN..‌ வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka mohan dances for chellamma song in bgm awards 2022

People looking for online information on Bgm awards 2022, Priyanka Mohan will find this news story useful.