"TARGET பண்ணி TRIGGER பண்றாங்க!".. பிரியங்கா பத்தி CONFESSION ரூமில் அக்‌ஷரா பரபரப்பு குற்றச்சாட்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் அடுத்து யார் கேப்டனாவது என்பது பஞ்சு சேகரிக்கும் டாஸ்க் மூலம் நடந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் இந்த வார கேப்டன் அபினய் மற்றும் சிறப்பு நுழைவில் வந்திருக்கும் முன்னாள் போட்டியாளர் அபிஷேக் இருவரையும் யாரும் நாமினேட் செய்யமுடியாது.

Advertising
>
Advertising

முன்னதாக தாமரையிடம் தொடர்ந்து வாய்ச்சண்டையில் ஈடுபட்ட பிரியங்கா, தாமரையிடம் அடுக்கு கேள்விகளையும், தாமரை கேப்டனாக தகுதி இல்லை என்கிற தமது விமர்சனத்தையும் முன்வைத்தார். மேலும் பஞ்சு சேகரிக்கும் டாஸ்கில், யார் கேட்பனாக வேண்டும் என்று பிக்பாஸ் கேட்டதற்கு தாமரை ஏன் கேப்டனாக வேண்டாம் என்பதற்கான காரணங்களை பிரியங்கா கூறியிருந்தார்.

அதுகுறித்து தாமரை கேட்டபோது, பிரியங்கா, பிக்பாஸ் அவ்வாறுதான் சொல்ல சொன்னார் என்று கூறினார். மேலும் தாமரையும் அக்‌ஷராவும் பாவனி தொடர்பாக முகபாவனையில் சைகை செய்துகொண்டதாகவும் பிரியங்கா குற்றம் சாட்டினார். அதற்கு மறுப்பு தெரிவித்த அக்‌ஷரா, நாங்கள் வேறு ஏதோ செய்திருப்போம். நாங்கள் எதற்கு அப்படி சைகை செய்துகொண்டோம் என்று நினைவில்லை. ஆனால் நீங்கள் சொல்வதையும் நாங்கள் செய்யவில்லை என கூறினார்.

இந்நிலையில் Confession ரூமில் அக்‌ஷரா பிரியங்காவை இந்த வார எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்துள்ளார். இந்த நாமினேஷனின்போது பிக்பாஸிடம் பேசிய அக்‌ஷரா, "பிரியங்கா ஒருவரை டார்கெட் செய்து அவர்களையே தொடர்ந்து ட்ரிக்கரிங் செய்வதை ஒரு விளையாட்டாகவும் யுத்தியாகவும் வைத்துள்ளார்" என்று பொத்தாம் பொதுவாய் குறிப்பிட்டு பிரியங்காவை நாமினேட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka is triggering people says akshara in nomination

People looking for online information on Akshara, BiggBossTamil5, Priyanka, Thamarai, Thamaraiselvi will find this news story useful.