தாமரைக்கு வந்த புதிய பிரச்சனை!.. பிரியங்கா செய்த நெகிழ்ச்சி காரியம்! உறைந்து போன சிபி! #BIGGBOSS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் தாமரைக்கும் பிரியங்காவுக்குமான வாய்க்கால் தகராறு ஊரறிந்தது.

priyanka gives solution to thamarai health issue biggboss
Advertising
>
Advertising

அண்மையில், பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த டிக்கெட் டூ கிராண்ட் ஃபினாலே 2வது டாஸ்க்கில் தாமரையும் பிரியங்காவும் பயங்கரமாக விளையாடினர். விளையாட்டின் இறுதியில் ஒருவரை ஒருவர் தமது கூட்டில் இருக்கும் முட்டைகளை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு தள்ளுமுள்ளு செய்து ஆடினர்.

priyanka gives solution to thamarai health issue biggboss

ஆனால் அப்போது தாமரை, பிரியங்கா தம்மை காண்டு ஏத்தியதாகச் சொல்லி டென்ஷனாகி பிரியங்காவை Hit பண்ணுமாறு தள்ளிவிட, பிரியங்காவுக்கு கோபம் வந்துவிட்டது. அதற்கு முன்புவரை தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையிலான சண்டைகள் பிக்பாஸ் வீட்டில் நீடித்திருந்தாலும், இந்த சம்பவத்தில் இருந்து, தாமரையுடன் பிக்பாஸ் முடியும் வரை பேசப்போவதில்லை என பிரியங்கா முடிவெடுத்தார்.

இந்நிலையில், வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தாமரை,  “எனக்கு என்ன ஆச்சுனு தெரியல.. எதுக்கு எனக்கு வயிறு எரியுது? இப்படி நடந்ததே இல்லையே?” என சொல்லிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதை தூரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் பிரியங்கா.

தாமரையின் இந்த நிலையை பார்த்த பிரியங்கா, அந்த பக்கம் வந்த சிபியை அழைத்து, சத்தமாக, “சிபி எனக்கு அல்சர் வரும் அப்பப்போ. நான் அப்போதெல்லாம் தேங்காய்ப் பால் சாப்பிடுவேன்” என கூறுகிறார். பிரியங்கா அப்படி சொன்னதுமே ஒரு கணம், அதிர்ச்சியாக பார்த்த  சிபி, பிரியங்கா, தாமரையிடம் சொல்ல வேண்டியதை தான் தம்மிடம் சொல்கிறார்.

உடனே பிரியங்கா சொன்னதை தாமரையிடம் சொன்ன சிபி, “கேட்டுச்சா? தேங்காய்ப் பால் குடிப்பீங்களாம்.. இந்த வீட்ல என்ன நடக்குதுனே தெரியல. பழைய படம் மாதிரி இருக்கு. பழைய படங்களில் தான் இப்படி ஒருவர் பேசியதையே மீண்டும் மீண்டும் பேசுவார்கள்” என்று கூறினார்.

மற்ற செய்திகள்

Priyanka gives solution to thamarai health issue biggboss

People looking for online information on Biggbosstamil, BiggBossTamil5, Thamarai priyanka assualt, Thamarai priyanka attack, Thamarai priyanka fight will find this news story useful.