‘நீ யார் பேர சொல்லுவ’.. கஷ்டப்பட்டு கேன்வாஷ் செய்த பிரியங்கா.. மொத்தமா முடிச்சுவிட்ட தாமரை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் 5வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

priyanka fun strategy didn work with thamaraiselvi biggbosstamil5

18 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் இணைந்தனர். அதன்பிறகு நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறிவிட்டதாக பிக்பாஸ் அறிவித்ததை அடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் 17 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

priyanka fun strategy didn work with thamaraiselvi biggbosstamil5

இதனிடையே அவர்களுக்கிடையில் கொடுக்கப்பட்டு வரும் டாஸ்க்குகள் அவர்களின் உண்மை மற்றும் இயல்பான முகங்களை வெளிக்கொண்டு வருகின்றன. ஒருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் தனித்தனியாக உருவாகத் தொடங்கி இருக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் நீடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கலாம் என்கிற அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதனிடையே ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்படுவதற்கான நாமினேஷன்களை கடந்த வாரம் செய்துள்ளனர்.  இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் எல்லாவற்றிலும் பங்கு கொள்பவர்கள், பங்கு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்கக் கூடிய டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றிய விதிகளையும் தகவலையும் அபிஷேக் முறையாக அறிவிக்கிறார். அதன் பின்னர் இதுகுறித்து தாமரைச்செல்வியிடம் பிரியங்கா, விளையாட்டாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நகைச்சுவையாக  “பிக்பாஸ் வீட்டுக்குள் யார் நல்ல புள்ள.. யார் எல்லா வேலையும் கரெக்டா பார்க்கிறார்கள்.. என்று கேட்டால் யார் பெயரை சொல்லுவ?” என்று கேட்க, தாமரைச்செல்வியோ, “நீங்கள் மூன்று பேரும் நன்றாக தான் வேலை பார்க்கிறீர்கள்” என்று கூற, அதற்கு பதிலுக்கு பிரியங்கா, “அது எனக்கு தேவையில்லை. நீயும் நானும் ஃபிரண்ட்ஸ் தானே? நீ எனக்கு ஃபிரண்டா இருந்தா எனக்கு எதாச்சும் லாபமா இருக்கணும்ல? அப்படி என்றால் யார் பெயரை சொல்லுவ?” என்று ராஜ தந்திரத்துடன் கேட்டதும், உடனடியாக சற்றும் யோசிக்காமல் நாடியா என்று தாமரைச்செல்வி பதிலளிக்கிறார்.

பிரியங்கா கேன்வாஷ் செய்யும் போதே தாமரைச்செல்வி தன் பெயரை சொல்ல வேண்டும் என்பதுபோல் பிரியங்கா சொல்லிக்கொடுத்து, அந்த பதிலையே தாமரைசெல்வியிடம் இருந்து எதிர்பார்க்கிறார் என்பது தெரிகிறது. ஆனால் “யார் பேரை சொல்லுவ?” என்று கேட்டதும், கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென  தாமரைச்செல்வி, நடியா என்று கூறுகிறார். ஒருகணம் அதிர்ச்சியான, பிரியங்கா உடனே ஒரு இந்திப் பாடலைப் பாடத் தொடங்கி விடுகிறார். இப்படி காமெடியாக முடிகிறது இவர்களின் உரையாடல்.

பிக்பாஸ் வீட்டுக்குள் தாமரைச்செல்வி தற்போது தலைவராக இருந்து வருகிறார். முன்னதாக தாமரைச்செல்வியை பிக்பாஸ், கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து, “ஹவுஸ்மேட்ஸ் நேரத்துக்கு எழுவதில்லை, மைக்கை சரியாக மாட்டுவதில்லை. இவற்றையெல்லாம் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் மேலும் தேவையான விதிகளையும் நீங்கள் வகுத்துக்கொள்ளலாம்” என்றும் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka fun strategy didn work with thamaraiselvi biggbosstamil5

People looking for online information on BiggBossTamil5, Priyanka, Thamaraiselvi will find this news story useful.