பரபரப்பான புதிய டாஸ்க்!.. பிரியங்கா பெயரை சொல்லி திடீரென பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கதைசொல்லும் டாஸ்க், பலூன் டாஸ்க், பால் பண்ணையில் பால் சேகரிக்கக் கூடிய செண்பகமே செண்பகமே டாஸ்க் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Priyanka evicted from luxury budget task biggbosstamil5 promo
Advertising
>
Advertising

அதன்படி அனைவரும் குட்டிச் சுட்டி குழந்தைகளுக்கு பிடித்தது போன்ற பொம்மை வேடங்களை அணிந்து கொண்டு, போட்டியாளர்களின் பெயர்கள் எழுதி ஒட்டப்பட்ட பொம்மைகளை எடுத்து கொண்டு வேகமாக ஓடி வரக்கூடிய டாஸ்க் தற்போது வைக்கப்பட்டிருக்கிறது.

Priyanka evicted from luxury budget task biggbosstamil5 promo

இந்த போட்டிக்கான விதிகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு முன்னதாக அறிவிக்கின்றனர். இதனைத்தொடர்ந்து பிரியங்காவின் பெயர் எழுதப்பட்ட பொம்மையை தாமரை எடுத்து வர, அதை நிரூப் மறைத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழக்கூடிய புரோமோவை காணமுடிகிறது.

மேலும் இதில் தலையிட்ட பிரியங்கா தாமரையிடம், “நிரூப் அப்படித்தான் அவனை விடு” என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். அந்த நேரத்தில் பிக்பாஸ் பிரியங்காவை அழைத்து, “லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் இருந்து பிரியங்கா வெளியேற்றப் படுகிறார்” என்று கூறுகிறார்.

ஆனால் உண்மையில் பிக்பாஸ், பிரியங்காவை தான் வெளியேற சொல்கிறாரா வேறு யாரையேனும் சொல்கிறாரா என்பது தெளிவாகப் புலப்படவில்லை. இந்த புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக உருவபொமையை உடைக்கும் டாஸ்கில், தன் உருவபொம்மையை உடைக்காமல் இருக்க, போட்டியாளர்களிடம் தன் பக்க நியாயத்தை சொல்லி பிரியங்கா கன்வின்ஸ் பண்ணிக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிரான தன் கருத்துக்களை நிரூப் சொல்லிக் கொண்டிருந்தார்.

இதனை அடுத்து நிரூப்பிடம் ஆவேசப்பட்ட பிரியங்கா, “நீ பேச வேண்டும் என்றால், உன்னுடைய சொந்த கருத்தை பேசு. நான் பேசியதற்கு எதற்கு கவுண்ட்டர் கொடுத்து உன் கருத்தை பேச வேண்டும்?” என்று கேட்டார்.

இந்நிலையில் இந்த டெடி பொம்மை டாஸ்கிலும், முந்தைய டாஸ்கை விடவும்,  அதிகமாக சண்டைகள் வெடிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றன என்பது அடுத்தடுத்த புரோமோக்கள் மூலம் தெரிய வருகிறது. ஆனால் அவை உண்மையில் சண்டைதானா அல்லது பிராங்கா என தெரியவில்லை.

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka evicted from luxury budget task biggbosstamil5 promo

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Priyanka, Raju Bhai, Raju BiggBoss, RajuJeyamohan, VJ Priyanka will find this news story useful.