பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த பேருந்து டாஸ்கின் போது கடைசி வரை பேருந்தில் யார் இருக்கிறார்கள் என்கிற விளையாட்டை நோக்கி அனைவரும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால், ராஜூ மற்றவர்கள் காப்பாற்றப்படப் படலாம் என்பதற்காக தான் விட்டுக் கொடுக்கும் யோசனையில் பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்தார். அதை பிரியங்கா தடுத்து ராஜூவிடம், “உனக்கான ஆட்டத்தை நீ ஆடு! ஏன் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கிறாய்” என்றார். ஆனால், ராஜூ, அவ்வாறு விட்டுக்கொடுக்கும் நோக்கத்தில் அதை செய்யவில்லை என்று விளக்கம் அளித்து அந்த டாஸ்கில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னர் ராஜூ செய்தது வேற லெவல் விஷயம். ஆம், பிக்பாஸ் ஒரு பீட்சாவை அனுப்பி வைக்க அதை காட்டி பிரியங்காவிடம் ஆசை காட்டினார். நீண்ட நாட்களாகவே பிக்பாஸிடம் பீட்சா கேட்டுக்கொண்டிருந்த பிரியங்காவோ ஒரு கணம் கூட தயங்காமல் பேருந்தில் இறங்கி ஆச்சர்யத்துடன் இறங்கி வந்துவிட்டார்.
இதுபற்றி வார இறுதியில் கமல் கேட்டபோது பேசிய பிரியங்கா, “முன்பெல்லாம் என்ன டாஸ்காக இருந்தாலும், பிரியாணி வரை கொடுத்தவர்கள் இந்த முறை பீட்சா கொடுத்தார்கள்.
எனக்கு பீட்சாவைவுக்காக ஓடிவந்தது அவமானமாக தான் இருந்துச்சு. இருந்தாலும், அதுக்கு அப்புறமா ஐஸ் கிரீம்லாம் கிடைச்சுது. அதனால சரி விளையாட்டை அடுத்தது பார்த்துக்கலாம்னு நெனைச்சேன். ஆனா பங்கமா போயிடுச்சு சார்! பிக்பாஸ் தான் பீட்சாவை எனக்கு அனுப்பணும்னு திட்டமிட்டு செஞ்சிருக்காரோனு தோணுச்சு” என்று சிரித்தபடி கூறினார்.
இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து பிரியங்கா காப்பாற்றப்படுவதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில், வரவிருக்கும் ‘அன்பறிவு’ படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா அறிவித்தார்.
பின்னர் பிக்பாஸ் கேமரா மூலம், தனக்கு ஓட்டு போட்டு தன்னை காப்பாற்றிய மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா, “பீட்சாவுக்காக அல்பத்தனமாக ஓடினேன், அதையெல்லாம் இருப்பினும் என்னை காப்பாற்றினீர்கள். நன்றி. நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன்!” என குறிப்பிட்டார்.