"உங்கள ரொம்ப புடிக்கும்" வெக்கப்பட்டு சிரிச்சிட்டே சொன்ன சிறுவன்.. PRIYANKA CHOPRA ரியாக்ஷன் தான் ULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரியங்கா சோப்ராவின் ரசிகரான சிறுவன் ஒருவன், பிரியங்காவை பார்த்து கூறிய விஷயமும், அதற்கு நடிகை கொடுத்த ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

விஜய் நடிப்பில் உருவான 'தமிழன்' என்னும் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, அதன் பின்னர் பாலிவுட் திரையுலகில் ஏராளாமான ஹிட் படங்கள் நடித்து கொடி கட்டிப் பறந்தார்.

பாலிவுட் மட்டுமில்லாமல், ஹாலிவுட்டிலும் நடித்து பட்டையைக் கிளப்பி உள்ளார் பிரியங்கா சோப்ரா. சமூக வலைத்தளத்திலும் பிரியங்கா சோப்ரா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அதிக அளவில் வைரலாகவும் செய்யும். இதனால், அவருக்கான ரசிகர் பட்டாளம் மிகப் பெரிது.

பிரியங்காவை நேசிக்கும் சிறுவன்

தனது காதலரான நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா  சோப்ரா, வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றையும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில், தன்னைக் குறித்து சிறுவன் ஒருவன் தெரிவித்த கருத்திற்கு பிரியங்கா சோப்ரா பகிர்ந்த பதிவு, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

பிரியங்கா கொடுத்த ரியாக்ஷன்

கடந்த 2017 ஆம் ஆண்டு, ஒரு கருத்துக் கணிப்பிற்கு பிறகு, உலகின் இரண்டாவது அழகான பெண்மணியாக பிரியங்கா சோப்ரா அறிவிக்கப்பட்டது தொடர்பான செய்தி ஒன்றை பார்த்துக் கொண்டே இருக்கும் சிறுவன் ஒருவன், சிரித்த முகத்துடன் பிரியங்காவை பார்த்து, "நான் அவரை நேசிக்கிறேன்" என கூறுகிறார். இது கண்டு அந்த சிறுவனின் தாயார், ஏன் நீ பிரியங்காவை நேசிக்கிறாய் என கேட்க, "ஏனென்றால் பிரியங்கா சோப்ரா அழகாக இருப்பதால்" என வெட்கத்துடன் சிரித்த படி கூறுகிறார் அந்த சிறுவன்.

பிரியங்கா சோப்ராவை நேசிப்பதாக சிறுவன் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே இருக்கும் டிக்டாக் வீடியோவை நடிகை பிரியங்காவும் கவனித்தார். இதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த பிரியங்கா சோப்ரா, "கிரேட் டேஸ்ட் மை ஃப்ரண்ட்" என ஜாலியாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka chopra reacted when a kid said he loves her

People looking for online information on Insta Story, Priyanka Chopra will find this news story useful.