நடிகை பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Also Read | மகளுடன் போட்டோஷூட் நடத்திய பிரியங்கா சோப்ரா.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் CUTE வீடியோ!
2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.
அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 84.6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது. கடந்த வருடத்தில் வாடகைத்தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு பெண் குழந்தையும் பிறந்தது.
இந்த குழந்தைக்கு மால்தி என பெயரிட்டனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது பிரியங்கா சோப்ரா பதிவிடுவார். ஒரிரு முறை குழந்தையின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரியங்கா சோப்ரா தனது குழந்தையுடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.
இதுதொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Vogue பிரிட்டிஷ் இதழுக்கு இந்த போட்டோ ஷூட்டை பிரியங்கா சோப்ரா நடத்தி உள்ளார். குழந்தையுடன் பிரியங்கா சோப்ரா இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படம் 2 மில்லியன் லைக்குகளை பெற்று வருகிறது. போட்டோ ஷூட் வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Also Read | "வதந்திகளை நம்பாதீர்கள்".. விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கை..