2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா.
Also Read | அரபிக்குத்து COMBO வோட அடுத்த சம்பவம்.. DON படத்தின் அடுத்த சிங்கிள்.. PRIVATE PARTY அப்டேட்!
இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.
குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 65 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது.
சில தினங்களுக்கு முன் பிரியங்கா சோப்ரா தம்பதியர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தனர். மேலும் இந்த சிறப்பான தருணத்தை குடும்பத்துடன் செலவு செய்ய இருப்பதாகவும் தன்னுடைய சமூக வலைதளத்தில் பிரியங்கா சோப்ரா அறிவித்தார். இந்த வருட துவக்கத்தில் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது லாஸ் ஏஞ்சல்ஸ் பங்களாவில் உள்ள நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோக்கள் மற்றும் படங்களைப் பகிர்ந்துள்ளார், 90களின் ஹிந்திப் பாடல்களை பகிர்ந்து அவற்றை ரசிகர்களை அடையாளம் காணும்படி கேட்டுக் கொண்டார்.
தில் ஹை கே மந்தா நஹி, பாஹோன் மே சாலே ஆவோ ரீமிக்ஸ், நீலே நீலே அம்பர் பர், பின் தேரே சனம் ரீமிக்ஸ் மற்றும் பீகி பீகி ராடன் மே ரீமிக்ஸ் போன்ற சில ஹிந்தி பாடல்களை பகிர்ந்து கொண்டார்,
பிரியங்கா தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறார், அங்கு அவர் கணவர் பாடகர் நிக் ஜோனாஸ் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிறந்த மகள் மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் ஆகியோருடன் வசித்து வருகிறார். பிரியங்கா தனது லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8