"பிரியங்கா ஆன்டியை பிடிக்கும்..".. "மெண்டல் மாரி பிஹேவ் பண்ணுவாங்க".. கேட்டு வாங்கிய பிரியங்கா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. அதுதான் ஒருநாள் பிக்பாஸ்.

priyanka aunty mental behvaiour says raju biggbosstamil5
Advertising
>
Advertising

ஒரு நாள் பிக்பாஸ்

அதாவது பிக்பாஸ் ஒரு நபரை ஆட்கொண்டால் அந்த நபர் பிக்பாஸ் ஆக மாறுவார். அப்படி பிக்பாஸ் ஆக மாறும் ஒரு நபரின் கட்டுப்பாட்டில் அந்த வீடு இருக்கும். முன்னதாக இதில் ராஜூ, ஒருநாள் பிக்பாஸ் ஆக மாறுகிறார். அவர் பிக்பாஸ் ஆக மாறிய பின்பு பிரியங்காவை மெயின் டோர் வழியாக வெளியே செல்லும்படி கட்டளை இடுகிறார். இதை கேட்டு அங்கு இருக்கும் அனைவரும் சிரிக்கின்றனர்.

priyanka aunty mental behvaiour says raju biggbosstamil5

டாஸ்குகள் என்கிற பெயரில் சலுகை

பின்னர் பிரியங்கா பிக்பாஸ் ஆக மாறும்போது அவர் மற்ற போட்டியாளர்களுக்கு சில டாஸ்குகளை கொடுக்கிறார். அவற்றை டாஸ்குகள் என்று சொல்வதை விட சலுகைகள் என்று தான் சொல்ல வேண்டும். அவர் செய்ததை எல்லாம் பார்க்கும் போது இப்படி ஒரு பிக்பாஸ் இருக்க கூடாதா என அனைவரும் நினைக்கும் அளவுக்கு ரசிக்கும்படியாக பிரியங்கா பெர்ஃபார்மென்ஸ் செய்தார்.

மெண்டல் மாதிரி பிஹேவ் பண்ணுவாங்க!

ஆம், பிக்பாஸ் ஆன பின் பிரியங்கா ராஜூவிடம், “ஆன்டியை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?” என கேட்கிறார். அதற்கு ராஜூ, “எந்த ஆன்ட்டியை கேட்கிறீர்கள்?” என வினவுகிறார். அதற்கு, “பிரியங்கா ஆன்டியை பிடிக்குமா?” என கேட்க, ராஜூவோ, “பிரியங்கா ஆன்டியை எனக்கு ரொம்ப பிடிக்கும். எவ்வளவு வயதானாலும் அவங்க அத வெளிய காட்டிக்காம இருக்காங்க. அதனால ரொம்ப பிடிக்கும் ஆனால். பிரியங்கா அப்பப்ப மெண்டல் மாதிரி பிஹேவ் பண்ணுவாங்க!” என கூறுகிறார்.

இரண்டு மணி நேரம் தூங்குங்க

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிரியங்கா, “போதும் நிறுத்துங்கள்!” என கூறுகிறார். அதன் பின்னர் அனைவருக்கும் இரண்டு மணி நேரம் தூங்குவதற்கு வாய்ப்புத் தருவதாக சொல்லிவிட்டு அனைவரையும் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு சென்ற பின்னர் பிரியங்கா, நிரூப்பை அழைத்து தனது தலையை மசாஜ் செய்து விடும்படி கேட்கிறார்.

பின்னர் அமீரை அழைத்து தன் கையை பிடித்து விடுமாறும், ராஜூவை அழைத்து தன் முன்பு ஒரு நடனம் ஆடும் படியும் சொல்கிறார்.  இறுதியாக அனைவரையும் டான்ஸ் ஆடவும் சொல்கிறார் அத்துடன் பிரியங்காவுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிவடைந்து விட்டது.

Also Read: நிரூப் சொன்ன ஒரு வார்த்தை!.. மொத்த சண்டையும் மறந்து கண்ணீர் விட்டுட்டாங்க பிரியங்கா!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka aunty mental behvaiour says raju biggbosstamil5

People looking for online information on Amir pavani, Biggboss today, Biggboss today episode, Biggboss today promo, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Priyanka, Raju will find this news story useful.