"எதுக்கு அப்டி பண்ணீங்க?".. காட்டு கத்து கத்திய நிரூப்!.. BIGGBOSS-இடம் குறும்படம் கேட்கும் பிரியங்கா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில் அன்னையில் டிவி டிபேட் ஷோ டாஸ்க் நடந்து முடிந்தது. இதில் பிரியங்கா, அபிஷேக், சிபி மூவரும் ரெட் டிவி தரப்பில் இருந்து சில போட்டியாளர்களின் உண்மை முகத்தை வெளிக் கொண்டுவரும் முனைப்பில் சில நாடகங்களை அரங்கேற்றினர்.

priyanka asks shortfilm to biggboss over niroop allegation
Advertising
>
Advertising

அவ்வாறு நிரூப் மற்றும் இமான் இருவருக்கும் இடையேயான உறவு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் இமான், நடக்காததை நடந்தது போல் சித்தரித்து குறிப்பிடுவதாக சொல்லி பாதியில் வெளியேறினார். இதேபோல் தாமரை மற்றும் வருணை ரெட் டிவியினர் பேட்டி எடுக்கும் பொழுது தாமரை சிபியை கொஞ்சுவது குறித்து பிரியங்கா விமர்சிக்கும் தொனியில் பேசினார். இதனால் தாமரை டென்ஷன் ஆனார். அதனால் இந்த சண்டையும் பெரிதாக வெடித்தது.

priyanka asks shortfilm to biggboss over niroop allegation

அதன் பின்னர் பிரியங்கா, அபிஷேக் உள்ளிட்டோர் இது வெறும் பிராங்க் என்று கூறினர். எனினும் தாமரை சமாதானம் ஆகவில்லை. இந்த நிலையில் தற்போது நிரூப் பிரியங்காவிடம், “அன்னைக்கே நான் சொன்னேன்.. கலாய்க்க வேண்டாம் என்று சொல்லியும் அதையும் மீறி ஏன் கலாய்த்தீர்கள்? ஏன் இப்படி செய்தீர்கள்?” என்று ஆவேசமாக பிரியங்காவிடம் சண்டை போடுகிறார்.

ஆனால் பிரியங்கா, நிரூப்பிடம், “அப்போது சிபியின் மெத்தையில் அமர்ந்து,  அனைவரும் ஒத்துழைத்தால்தான் இதைச் செய்யப் போகிறோம் என்று நான் பேசியது உனக்கு தெரியாதா? அப்போது ஏன் ஒப்புக் கொண்டாய்? இப்போதுதான் உனக்கு தெரிகிறதா?” என்று கேட்கிறார்.

இதனிடையே, அபிஷேக், நிரூப்பிடம், “அவளை(பிரியங்காவை) ஏன் திட்டுற நீ? நேரடியாக என்னிடம் கேள்?” என்று ஆஜராகிறார். இறுதியில் பிக்பாஸிடம் இந்த விஷயத்தை திட்டமிடும்போது நடந்தவற்றை குறும்படமாக வெளியிட வேண்டி கைகூப்பி கேட்கிறார் பிரியங்கா.

முன்னதாக நிரூப், இந்த டிவி டாஸ்க் விவகாரத்தில் பிரியங்கா, அபிஷேக், சிபி மூவரும் ஸ்கிரிப்ட் டிஸ்கஷனில் ஈடுபட்டு இருந்தபோது தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதை நேரடியாக கூறவில்லை என்றாலும், இது அவர்களின் கருத்து அல்லது பார்வை எனும் போது தான் ஒன்றும் சொல்லவில்லை என்று குறிப்பிட்டார். அப்போதே சிபி , “நிரூப்புக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கிறார் எனும்போது அதை நாம் செய்ய முடியாது!” என்று குறிப்பிட்டார்.

தற்போது இதைப்பற்றி சொல்லும்  நிரூப், “நான் அப்போதே வேண்டாம் என்றுதான் சொன்னேன்?” என்று ஆவேசமாக கத்துகிறார். இதை தொடர்ந்து அடுத்தடுத்த நிலைகளில் இந்த சண்டை வளர்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka asks shortfilm to biggboss over niroop allegation

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Priyanka, Vijay Television, Vijaytv will find this news story useful.