அள்ளுதே 😍.. SK & சூர்யா பட ஹீரோயினின் மாடர்ன் லுக்..!.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை பிரியங்கா மோகனின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

Source: Priyanka Mohan Instagram

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் நானி நடித்து விக்ரம் குமார் இயக்கிய 'கேங் லீடர்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

Source: Priyanka Mohan Instagram

அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்து பிரபல முன்னணி தமிழ் ஹீரோக்களான ஜெயம் ரவியுடனும் நடிகர் தனுஷூடனும் ஜோடி சேர்ந்துள்ளார். தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் பிரியங்கா மோகன் தற்போது நடித்து வருகிறார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் சினிமாவில் நடித்துள்ள பிரியங்கா மோகன், ஒந்த் கதே ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் திரையுலகில் அறிமுகமானார்.

Image Source: Priyanka Mohan Instagram

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டவர்.

பிரியங்கா மோகன், தற்போது 4 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜகதீஷ் பழனிச்சாமியின் தி ரூட் நிறுவனம் தான் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள கணக்குகளை கவனித்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Priyanka Mohan Instagram

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன், பிரபல போட்டோ கிராபர் Hunar Daga உடன் இணைந்து நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகின்றன. வெண் பச்சை நிற உடையில் பிரியங்கா மோகன் இந்த போட்டோ ஷூட்டில் தோன்றி உள்ளார். "எல்லா மேஜிக்கும் ஃபிரேமில் அடங்கி உள்ளன" என்று தலைப்பிட்டு புகைப்படங்களை பிரியங்கா மோகன் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Arul Mohan Latest Photoshoot with Hunar Daga

People looking for online information on Priyanka Mohan will find this news story useful.