திருமணத்திற்கு பிறகு ப்ரியா மணி RE ENTRY கொடுக்கும் தமிழ் படம்..? ரிலீஸ் எப்போ? சூப்பர் அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சி பி ஐ அதிகாரியாக ப்ரியாமணி நடிக்கும்  'DR 56' படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | உலகப்புகழ் பெற்ற கேரள கோவிலில் சாமி தரிசனம் செய்த தமன்னா.. வைரல் ஃபோட்டோ

ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி வழங்க , ஹரி ஹரா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தமிழ் மற்றும் கன்னட  மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம்  "  DR 56 "

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 9 ம் தேதி ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.

தேசிய விருது பெற்ற பிரபல நடிகை பிரியாமணி இந்த படத்தின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் பிரவீன், தீபக் ராஜ் ஷெட்டி, ரமேஷ் பட், யத்திராஜ், வீணா பொண்னப்பா, மஞ்சுநாத் ஹெக்டே, சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

சார்லி 777 படத்திற்கு இசையமைத்த நோபின் பால் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற விக்ரம் மோர் ஸ்டண்ட் அமைத்துள்ளார். இவர் கேஜிஎப், காந்தாரா ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சி இயக்குனராக பணிபுரிந்தவர்.

ராஜேஷ் ஆனந்த் லீலா இந்த படத்தினை இயக்கியுள்ளார். ஸ்ரீ லட்சுமி ஜோதி கிரியேஷன்ஸ் A.N. பாலாஜி இந்த படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கியிருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அவரே  படத்தை வெளியிட இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ராஜேஷ் ஆனந்த் லீலா பாகிர்ந்தவை....

இது அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர். தற்போது சமூகத்தில் நிலவிவரும் உண்மைச் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறோம். ப்ரியாமணி CBI அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த கதையை சொல்லும்போதே ப்ரியாமணி மிகவும் பிரம்மிப்பானார். நேர்த்தியான CBI அதிகாரியாக நடிக்க தன்னை முற்றிலும் தயார்படுத்திக் கொண்டார். படம் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுத்ததால் ஓரே காட்சிகளை மாற்றி மாற்றி எடுப்பதில் சவாலாக இருந்தது. விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும். ப்ரியாமணி தனது திருமணத்திற்கு பிறகு நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது.
படம் வருகிற டிசம்பர் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Also Read | மாளவிகா மோகனன்.. சரவெடி தீபாவளி போட்டோஷூட்.. வைரலாகும் TRADITIONAL லுக்!

தொடர்புடைய இணைப்புகள்

Priyamani as CBI officer in Science fiction Thriller Film DR 56

People looking for online information on DR 56, Priyamani, Priyamani as CBI officer, Thriller Film will find this news story useful.