ஸ்பெஷல் ஷோவில் கண்ணீர் விட்டழுத பிரியா வாரியர்.. ‘இது ஆனந்த கண்ணீர்’.. துடைத்துவிட்ட ஹீரோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாளத்தில் வெளியாகி இளைஞர்களிடையே வரவேற்பு பெற்ற திரைப்படம் ஒரு அடர் லவ்.

Priya Varrier Cries in 4 Years Screening Priya Prakash Varrier
Advertising
>
Advertising

இந்த திரைப்படத்தில் முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் இல்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியா வாரியர். பிரியா வாரியர் என ரசிகர்களால் அழைக்கப்படும் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், இந்த திரைப்படத்தின் டீசரிலேயே இடம் பெற்றிருப்பார். ஆம், பிரியா வாரியர் ஒரு காட்சியில் காதலுடன் கண்ணடித்த சீன் மிகவும் ட்ரெண்டானது.  இளைஞர்களிடையே வெகுவேகமாக பரவிய இந்த வீடியோவை தொடர்ந்து பிரியா வாரியர் தென் இந்தியா முழுவதும் பலரிடையே ரீச் ஆனார்.

Priya Varrier Cries in 4 Years Screening Priya Prakash Varrier

அதன் பின், இந்த படம் தியேட்டர்களில் வெளியான பிறகும் பிரியா வாரியரின் கொஞ்சலான நடிப்பும், அவரது ரியாக்‌ஷன்களும் கவனம் ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து அதிக திரைப்படங்களில் பிரியா வாரியர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக பிரியா வாரியரை அதிக படங்களில் காண முடியவில்லை. இந்த நிலையில் தான் தற்போது பிரியா வாரியர் மீண்டும் ஹீரோயினாக நடித்திருக்கக் கூடிய புதிய திரைப்படம் வெளியாகிறது.

ஆம், மலையாளத்தில் பிரியா வாரியர் ஹீரோயினாக நடித்திருக்கும் 4 YEARS என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. பொறியியல் கல்லூரியில் பயிலக்கூடிய காதல் ஜோடிகள் பற்றிய ரொமாண்டிக்கான இந்த கதை இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் தற்போது திரைக்கு வருகிறது. ஆம், நவம்பர் 25-ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கென 4 YEARS என்கிற இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி கேரளாவில் திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் இந்த திரைப்படத்துக்கு கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்துதான் பிரியா வாரியர் கண்ணீர் விட்டு கதறி அழ கூடிய காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடலில் பிரியா வாரியரிடம் பத்திரிகையாளர்கள் அணுகி பேட்டி எடுக்க போக , அப்போது ஆனந்த கண்ணீரில் பிரியா வாரியர் அழுதேவிட்டார். அந்த படத்தின் ஹீரோ அவரது கண்ணீரை துடைத்து விட்டு சமாதானப்படுத்தி இருந்தார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் உட்பட திரையுலகினர் பலரும் பிரியா வாரியரின் இந்த படத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Priya Varrier Cries in 4 Years Screening Priya Prakash Varrier

People looking for online information on 4 Years, 4 Years Movie, Priya Prakash Varrier, Priya Varrier will find this news story useful.