நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் தொடக்கத்தில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி, பின்னர் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார்.
அந்த சீரியலில் பிரியாவின் ஹோம்லியான நடிப்பிற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா-வுடன் இணைந்து மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் அவர் நடித்தார்.
இந்நிலையில் வைகைப் புயல் வடிவேலு பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வர, இன்னொரு பக்கம் பிரியா பவானி சங்கர் மற்றும் வடிவேலு சோபாவில் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஆம், எலி படத்தில் நடிகர் வடிவேலு, ஒருவேளை எலி பார்ட் 2 படத்தில் நடித்தால் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மார்ஃபிங் செய்துள்ளனர்.
இந்த புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிரியா பவானி சங்கர், “அந்த அதிர்ஷ்டமான பெண்” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இம்சை அரசன் திரைப்பட பிரச்சனைகள் தொடர்பான அனைத்தும் முடிவடைந்த நிலையில், வடிவேலு நடிக்கும் அடுத்தடுத்த 2 படங்களை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
அதன்படி, சுராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு, 'நாய் சேகர்' என அந்த படத்துக்கு பெயர் வைப்பதாக கூற, இந்த டைட்டிலும் ஒரு சிக்கலில் உள்ளது என்றாலும், இந்தப் படத்தின் பிரத்யேக பூஜை விநாயகர் சதுர்த்தி (10.09.2021) அன்று நடந்தது.
Also Read: விபத்தில் சிக்கிய இளம் நடிகரின் உடல்நிலை!.. மீண்டும் வெளியான மருத்துவமனை அறிக்கை!