சுவிட்சர்லாந்து வானத்தில் இருந்து குதித்த பிரியா பவானி சங்கர்.. த்ரில்லான SKY DIVE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரியா பவானி சங்கர் சுவிட்சர்லாந்து நாட்டில் SKY DIVE செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertising
>
Advertising

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் ஐரோப்பிய நாடுகளில் நண்பர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். 

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்ற பிரியா பவானி சங்கர் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை சுற்றிப் பார்த்தார். மேலும் பாரிஸ் நகர வீதிகளில் பிரான்ஸ் உணவுகளை சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அடுத்து பிரான்ஸ் டூரை முடித்து கொண்டு அடுத்த நாடாக பெல்ஜியம் நாட்டிற்கு சென்றார். பெல்ஜியம் வீதிகளில் உலா வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

பின்னர் அடுத்த நாடாக நெதர்லாந்து நாட்டிற்கு சென்றார். அங்கு ஆம்ஸ்டர்டம் நகரில் சைக்கிளில் ஊர் சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

நெதர்லாந்து நாட்டில் இருந்து சில நாட்களுக்கு முன் ஜெர்மனி நாட்டிற்கு சென்றார். அங்கு பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில் சுற்றுலா சென்றார். பிளாக் ஃபாரஸ்ட் நீர்நிலைகளின் கரைகளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.‌

தற்போது ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அடுத்த நாடாக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பிரியா பவானி சங்கர் சென்றுள்ளார். அங்கு தனது ஆண் நண்பர் ராஜ் வேலுடன் ஹெலிகாப்டரில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

ஸ்கை டைவிங் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார். இந்த ஸ்கை டைவிங் வீடியோ காண்போரை த்ரில்லாக்குகிறது.

 

பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

 

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Sky Dive Video from Switzerland

People looking for online information on Priya Bhavani Shankar, SKY DIVE, Switzerland will find this news story useful.