இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்த ரசிகர்.. UNSEEN போட்டோவை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

Advertising
>
Advertising

Also Read | இந்த ஜூலை கடைசி வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார்.

கடைசியாக ஜூலை 1 ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.

அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர், "கருப்பு நிற உடையில் ஒரு போட்டோவை பகிருங்கள் " என கேட்டார். அதற்காக பிரியா பவானி சங்கர் தனது த்ரோ பேக் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார்.

மேலும் பல கேள்விகளுக்கும் பிரியா பவானி சங்கர் பதில் அளித்துள்ளார்.

Also Read | அனிருத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடிய பாடல்.. இது திருச்சிற்றம்பலம் ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani Shankar shared unseen picture for fan

People looking for online information on Priya Bhavani Shankar, Priya bhavani Shankar Latest Pictures will find this news story useful.