BOY FRIEND -ஐ TAG செய்து நடிகை பிரியா பவானி சங்கர் பகிர்ந்த வைரல் மீம்😍.. அதுக்கு அவர் கொடுத்த REPLY!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தில் ரஞ்சனி எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். கடைசியாக பிரியா பவானி சங்கர் நடிப்பில் தெலுங்கு மொழியில் "கல்யாணம் காமனியம்" படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை, டிமான்ட்டி காலனி- 2, அகிலன், இந்தியன் 2 உள்ளிட்ட  படங்கள் உருவாகி வருகின்றன.

நடிகை பிரியா பவானி சங்கர், LIAM's Diner என்ற பெயரில் சமீபத்தில் புதிய உணவகம் ஒன்றை துவங்கி உள்ளார். சென்னை மாம்பாக்கத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது.

சிலநாட்களுக்கு முன் தனது ஆண் நண்பர் ராஜ்வேலுடன் புதிய கடற்கரை வீட்டில் குடியேறியதாக அதிகாரப்பூர்வமாக பிரியா பவானி சங்கர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பர் ராஜ்வேலை டேக் செய்து ஒரு மீமை பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நாள் முழுவதும் ஆண் நண்பரை புறக்கணிக்க போவதாக ஒரு பெண் கூறுவது போலவும் அதற்கு ஆண் நண்பர் அருமையான நாள் என கூறுவது போலவும் மீம் அமைந்துள்ளது. இதை பகிர்ந்த பிரியா பவானி சங்கர் தனது ஆண் நண்பர் ராஜ்வேலையும் டேக் செய்து இருந்தார். இந்த மீமுக்கு பதில் அளித்த ராஜ்வேல், அப்படி எல்லாம் இல்லை. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. நம்பு பேபி" என ரிப்ளே ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

BOY FRIEND -ஐ TAG செய்து நடிகை பிரியா பவானி சங்கர் பகிர்ந்த வைரல் மீம்😍.. அதுக்கு அவர் கொடுத்த REPLY! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Shared a Meme on Instagram

People looking for online information on Priya Bhavani Shankar, Rajvel will find this news story useful.