பத்திரிகையாளராக இருந்து, சீரியல் நடிகையாக மலர்ந்து பின்னர் வெள்ளித்திரையில் நாயகியாக வளர்ந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.
நடிகை என்பதையும் தாண்டி அடிப்படையில் ஒரு ஊடகவியலாளர் என்பதால் தம்முடைய கருத்துக்களை தமிழிலேயே வெளிப்படுத்தக் கூடியவரான ப்ரியா பவானி ஷங்கர், அண்மையில் ட்விட்டரில் ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்’ என குறிப்பிட்டு தற்போதைய தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இதுபற்றி ட்விட்டர் வாசி ஒருவர், தமது கருத்தை முன்வைப்பதற்கு பதிலாக ப்ரியா பவானி ஷங்கரின் கடந்த கால கருத்துக்களை குறிப்பிட்டு அவர் திராவிட சிந்தனை மரபுக்கு ஆதரவானவர் என்பதை சற்றே அநாகரிகமான பாணியில் குறிப்பிட்டிருந்தார், இதற்கு பதில் அளித்த ப்ரியா பவானி ஷங்கர், “This cracked me up Face with tears of joy பெரிய CID.. ஏதோ தேடி கண்டுபிடிச்ச மாதிரி இதுல என்ன பெருமை? என் timeline la இன்னும் தானே இருக்கு? 4 வருஷம் journalista இருந்திருக்கேன். என் வேலையே அதுதான் Face with tears of joy இன்னும் நிறைய எழுதிருக்கேன். நன்கு தேடவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இளம் ஹீரோயின் இப்படி தமிழில் தெறிக்கவிடும் அரசியல் கருத்துக்களை நேரடியாக பேசுவதும், தம் மீதான விமர்சனங்களை கூலாக எதிர்கொள்வதும் பலரிடையே பாராட்டை பெற்று வருகிறது. எனினும் இப்படியான கருத்து வாதங்கள் அவரது ட்விட்டரில் தொடர்ந்தபடியே தான் உள்ளன.
ALSO READ: 'புரட்சி படைத்த முதல்வர்!'.. 'துணை நின்ற புதல்வர்!'.. சூரி அனல் பறக்கும் வாழ்த்துக்கள்!