S.J சூர்யா - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய ROMANTIC THRILLER படம்.. வெளியான மிரட்டல் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் பொம்மை படத்ட்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | பரதநாட்டியம் ஆடி அசத்திய DD.. அதிலேயும் அந்த ரியாக்சன்ஸ் தான் ஹைலைட்ஸ்.! வைரல் வீடியோ

மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த ப்ரியா பவானி ஷங்கர் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மாநாடு ஒளிப்பதிவாளர்  ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பொம்மை படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த படத்தின் இசை உரிமையை பிரபல இசை வெளியீட்டு  நிறுவனமான ‘திங்க் மியுசிக்’ கைப்பற்றியுள்ளது.  இப்படத்தை நடிகர் SJ சூர்யா ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH  LLP) நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ரொமான்டிக் த்ரில்லர் வகைமையில் இப்படம் உருவாகி உள்ளதாக டிரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஜே சூர்யா சைக்கோவாக நடித்துள்ளார். ப்ரியா பவானி சங்கர், சூர்யாவின் காதலியாக கற்பனை கதாபாத்திரம் போல டிரெய்லரில் தோன்றியுள்ளார். ஜவுளிக்கடையில் வேலைபார்க்கும் நபராக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். பொம்மைகள் மீது கற்பனையை உலவ விடும் மனப்பிறழ்வு கொண்டவராக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார்.

பொம்மை பட தலைப்பு,  கடந்த 1964ம் ஆண்டு எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் வி.எஸ்.ராகவன், எல்.விஜயலக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிளாசிக் சஸ்பன்ஸ் த்ரில்லர் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | நிறைமாத கர்ப்பத்துடன் நடிகை ப்ரணிதாவின் போட்டோஷூட் . வைரல் ஆகும் ஃபோட்டோஸ்.!

S.J சூர்யா - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய ROMANTIC THRILLER படம்.. வெளியான மிரட்டல் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani Shankar S J Suriyah Bommai movie trailer

People looking for online information on Bommai Movie, Bommai movie trailer, Priya Bhavani Shankar, S J Suriyah will find this news story useful.