அட பிரியா பவானி சங்கரா இது? ஜொலிக்கும் மாடர்ன் உடையில் வைரல் PIC!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரியா பவானி சங்கர் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

போடு சக்க! Beast அரபிக்குத்து.. கீர்த்தி ஷெட்டி செம குத்தாட்டம் .. சிதறவிடும் வீடியோ

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலமாக கவனம் ஈர்த்தார். சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு ஏராளமான  ரசிகர்கள் இருந்தனர். பின்னர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து இப்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்…

எஸ்.ஜே சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து அவர் நடிப்பில் அருண் விஜய்யுடன் மாபியா, ஒ மணப்பெண்ணே மற்றும் வெப் சீரிஸான பிளட் மணி ஆகியவற்றில் நடித்து தமிழில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

தமிழைத் தாண்டியும் தெலுங்கில்…

வரிசையாக தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கரின் காதல்…

சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் புகைப்படம்…

வழக்கமாக ஹோம்லியான லுக்கில் அதிக புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனால் இப்போது அரிதாக மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர ரசிகர்கள் அடையாளமே தெரியாத அளவுக்கு அந்த புகைப்படத்தில் இருக்கிறார். தங்க நிற உடையில் ஜொலிக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தோடு ‘ ’என் மனதின் பாதி அலைந்து திரிகிறது. இன்னொரு பாதி அதைத் தேடுகிறது’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இறுகிய ABS வயிற்று தசையுடன் ராஷ்மிகா மந்தனா! என்னா பிட்னஸ்யா இது..! வைரல் புகைப்படம்

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani shankar rare modern dress pic

People looking for online information on Meyaadha Maan, Monster, Oh Manapenne, Priya Bhavani Shankar will find this news story useful.