தமிழ் புத்தாண்டு.. சித்திரையா? தை மாதமா? பிரியா பவானி சங்கர் பதிவிட்ட வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அண்மையில் திருச்சிற்றம்பலம் ருத்ரன், பத்து தல  படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.  மேலும் தெலுங்கு மொழியில் "கல்யாணம் காமனியம்" படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது  பொம்மை, டிமான்ட்டி காலனி- 2, இந்தியன் 2 உள்ளிட்ட  படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர், தமது டிவிட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், " இது பாரதிதாசனுக்கு தெரியுமா?😂சமூக வலைதலத்தில் பகிரப்படுவது எல்லாம் உண்மை இல்ல sir.நித்திரை சித்திரைனு rhyminga இருக்குனு நம்பி அவர் accountல இந்த ‘கவிதைலாம்’ சேர்த்துடாதீங்க. பகுத்தறிவோம்,பதில் தேடுவோம். மத்தபடி தமிழ் புத்தாண்டோ,சித்திரை திருநாளோ சந்தோஷமா இருப்போம். அது போதும்🤗" என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Post about Tamil New Year Month

People looking for online information on Priya Bhavani Shankar will find this news story useful.