தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் புது வீட்டில் தனது காதலருடன் குடியேறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடந்த ஆண்டு ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார்.
சமீபத்தில் யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் சோனி லிவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜியிலும் நடித்துள்ளார். இது போக நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் திருச்சிற்றம்பலம் படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.
சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குறிப்பாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்ற பிரியா பவானி சங்கர் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை சுற்றிப் பார்த்தார். மேலும் பாரிஸ் நகர வீதிகளில் பிரான்ஸ் உணவுகளை சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை, டிமான்ட்டி காலனி- 2 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், 18 வயதில் எங்கள் மாலைப்பொழுதைக் கடலில் எழும் நிலவைப் பார்த்துக் கொண்டு இருக்க, கடற்கரையில் ஒரு வீடு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். தற்போது நாங்கள் எங்கள் புதிய வீட்டிற்கு அடியெடுத்து வைக்கிறோம்." என பதிவிட்டுள்ளார்.
மேலும் காதலர் ராஜ் வேலுடன் வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் புகைப்படங்களையும் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளார்.