தனது ஆஸ்தான போட்டோகிராபர் கூட பிரியா பவானி சங்கர் செம போட்டோஷூட்! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரியா பவானி சங்கர் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார்.

கடைசியாக ஜூலை 1 ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தனது ஆஸ்தான போட்டோகிராபர் அருண் பிரசாத் உடன் இணைந்து புதிய போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கேஷூவல் லுக்கில் ஜீன்ஸ் அணிந்து பிரியா பவானி சங்கர் காட்சியளிக்கிறார்.

பிரியா பவானி சங்கரின் கடந்த சில போட்டோ ஷூட் புகைப்படங்களை அருண் பிரசாத் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Latest Photoshoot with Arun

People looking for online information on Priya Bhavani Shankar will find this news story useful.