நெதர்லாந்து நாட்டு சாலையில் சைக்கிள் ஓட்டும் பிரியா பவானி சங்கர்.. சூப்பர் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் நெதர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "தனுஷ் நடித்த சிறந்த படங்களில் ஒன்று 'திருச்சிற்றம்பலம்'.." பிரபல தமிழ் இயக்குனரின் கருத்து!

பிரியா பவானி சங்கர் சமீபத்தில்  யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்திலும், குருதி ஆட்டம் படத்தில் வெண்ணிலா எனும் கதாபாத்திரத்திலும், திருச்சிற்றம்பலம் படத்தில் ரஞ்சனி எனும் கதாபாத்திரத்திலும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் சோனி லிவ் தளத்தில் வெளியான விக்டிம் ஆந்தாலஜியிலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். 

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்ற பிரியா பவானி சங்கர் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை சுற்றிப் பார்த்தார். மேலும் பாரிஸ் நகர வீதிகளில் பிரான்ஸ் உணவுகளை சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அடுத்து பிரான்ஸ் டூரை முடித்து கொண்டு அடுத்த நாடாக பெல்ஜியம் நாட்டிற்கு சென்றார். பெல்ஜியம் வீதிகளில் உலா வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பகிர்ந்தார்.

தற்போது அடுத்த நாடாக நெதர்லாந்து நாட்டிற்கு சென்று ஊர் சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டம் நகரின் சாலையில் சைக்கிள் ஓட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் சாலையில் நின்றபடி எடுத்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது ருத்ரன், பத்து தல, பொம்மை உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

Also Read | பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது" பட டிரெய்லர்.. வெங்கட் பிரபு போட்ட வைரல் கமெண்ட்!

தொடர்புடைய இணைப்புகள்

Priya Bhavani Shankar Latest Photo from Netherlands Amsterdam

People looking for online information on Netherlands Amsterdam, Priya Bhavani Shankar, Priya Bhavani Shankar Latest Photo will find this news story useful.