காதலருடன் LATEST புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்! கூட யாரெல்லாம் இருக்காங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது காதலர் உடன் எடுத்த லேட்டஸ்ட்  புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | காஜல் அகர்வால் ஸ்டைலில் கர்ப்பமான வயிறுடன் பிரபல சீரியல் நடிகை ராஷ்மி போட்டோஷூட்.. வைரல் VIDEO

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். 

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரியா பவானி சங்கர், காதலர் ராஜ்வேல் உடன் அவர்களது நெருங்கிய நண்பர்கள் நவீன், அர்ஷத், ரம்யா ஆகியோர் இந்த புகைபடத்தில் உள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

காதலருடன் LATEST புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்! கூட யாரெல்லாம் இருக்காங்க? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani Shankar latest Instagram photo with rajvel

People looking for online information on Priya Bhavani Shankar, Priya bhavani Shankar latest Images will find this news story useful.