தனக்கு பிடித்த ஊர் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
Also Read | கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தின் வெளியான புதிய ரிலீஸ் தேதி! முழு தகவல்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். சமீபத்தில் ஒ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் படங்களில் நடித்தார்.
கடைசியாக ஜூலை 1 ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், பத்து தல, பொம்மை, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.
அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர். இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர், "அசோக் நகரை தவிர தமிழ் நாட்டில் உங்களுக்கு பிடித்த ஊர் எது? " என கேட்டார். அதற்கு பிரியா பவானி சங்கர் 'கனனியாகுமரி' என இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கேள்விகளுக்கும் பிரியா பவானி சங்கர் பதில் அளித்துள்ளார். குறிப்பாக தனது அடுத்த சிங்கப்பூர் பயணம், கிரேக்க நாட்டிற்கு செல்ல ஆசைப்படுவது குறித்தும் பதில் அளித்துள்ளார்.
தனக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகராக பிராட் பிட்டை நடிகை பிரியா பவானி சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
Also Read | இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்த ரசிகர்.. Unseen போட்டோவை வெளியிட்ட பிரியா பவானி சங்கர்!