”ஹரி சார் UPGRADE ஆகிட்டாரு… இது 2.0”… யானை PRESS MEET-ல் பிரியா பவானி சங்கர் பகிர்ந்த சீக்ரெட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யானை படத்தின் டிரைலர் வெளியீட்டு சென்னையில் நடந்த நிலையில், அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Advertising
>
Advertising

Also Read | ”ஒரு மகத்தான நாள்… What a Man” சூப்பர் ஸ்டாரை சந்தித்த பின் ‘டான்’ இயக்குனரின் வைரல் Pics!

யானை….

நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழு இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.  யானை திரைப்படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் சென்சாருக்கு தயாராகி வருவதாக அருண் விஜய் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று ‘யானை’ படத்தின் டிரைலர் வெளியானது. சமூகவலைதளத்தில் இந்த டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருந்தார்.

பிரியா பவானி சங்கர்…

சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் அருண் விஜய், இயக்குனர் ஹரி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய பிரியா பவானி சங்கரிடம் பத்திரிக்கையாளர்கள்  “வழக்கமாக ஹரி சார் படத்தில் ஹீரோயின்கள் கதையில் ஹோம்லியாகவும், பாடல் காட்சிகளில் கிளாமராகவும் தோன்றுவார்கள். இந்த படத்தில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்கள்” எனக் கேட்டனர்.

ஹரி 2.0….

அதற்குப் பதிலளித்த பிரியா பவானி சங்கர் “சார் கத சொல்ல கூப்பிட்ட போதே, எனக்கும் அது தோனுச்சு. எப்படியும் படத்துல ஒரு செட் பாட்டு இருக்கும்னு.  அந்த பாட்டு சூப்பராவும் இருக்கும். சார் கத சொல்லி முடிச்சதும் நான் ‘சார் அந்த செட் பாட்டு எங்க வருது’னு கேட்டேன். அவர் ‘இல்ல சார் நம்ம படத்துல வராது. நான் இப்ப upgrade ஆகிட்டேன்மா. இது 2.0. இந்த படத்துல அந்த பாட்டு வராது’ என்று சொன்னார். சார் கூட இப்போ பேசும்போது அவரே சொன்னாரு. அவரும் Evolve ஆயிட்டேன்னு. அதனால் நம்ம படத்துல அதுக்கு இடம் இருக்காது” என்று பதிலளித்துள்ளார்.

Also Read | விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதபாத்திரம்… Mass போஸ்டரோடு வெளியான தகவல்

Priya bhavanai sankar speech in yaanai trailer launch

People looking for online information on Priya bhavanai sankar, Yaanai movie, Yaanai trailer launch will find this news story useful.