கேரளாவில் கருவுற்றிருந்த யானை, வெடிமருந்து கலந்த அன்னாசி பழத்தை உண்டு, மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. மக்கள் மற்றும் பிரபலங்களும் அந்த யானையின் சார்பாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் இது பற்றி தற்போது பதிவிட்டுள்ளார். கேரளாவின் பிரபல நாளிதழில் வெளியான சில முக்கிய குறிப்புகளை அவர் விளக்கியுள்ளார். அவர் கூறும்பொழுது "கேரளாவில் கருவுற்றிருந்த யானைக்கு யாரும் வேண்டுமென்றே வெடிமருந்துகள் கலந்த அன்னாசிப்பழத்தை கொடுக்கவில்லை. வெடிமருந்து கடந்த அன்னாசிப்பழம் வயல் பகுதிகளில் காட்டு பன்றியை துரத்த வைக்கப்படுகிறது. இது சட்டவிரோதமான செயல் என்றாலும் பல பகுதிகளில் கொடிய மிருகங்களை வயல் பகுதிகளில் இருந்து விரட்ட இம்முறை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் மலப்புரம் பகுதியில் நடக்கவில்லை. பாலக்காடு பகுதியில் நடந்தது. போலீஸ் மற்றும் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட வனத்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து யானையை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். யானை 27ம் தேதியே மரித்துவிட்டது. நேற்று இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.