சமீப காலமாகவே இந்திய சினிமாவில் அடுத்தடுத்து துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'அய்யப்பனும் கோஷியும்'. இந்த படத்தில் நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் கதாசிரியர் சச்சி நேற்று மரணம் அடைந்தார். இந்த செய்தி திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இருவரும் இந்த செய்தியினால் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர். பிருத்விராஜ் ஒரே வார்த்தையில் "போய்விட்டார்" என்று தன் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். பிஜு மேனன் "வாழ்விலும் உங்களை நேசித்தோம்...மரணத்திலும் உங்களை நேசிக்கிறோம். சீக்கிரமே எங்களை பிரிந்து விட்டீர்கள். எனது ஆழ்ந்த இரங்கல்... இறைவன் அவரது குடும்பத்தை அசீர்வதிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.