தனக்கு எப்பொழுதும் பிடித்த 3 திரைப்படங்கள் எவை என சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.

Also Read | "நம்ம எப்போ ஷூட்டிங் போலாம்".. வெங்கட் பிரபு கேள்விக்கு SK அளித்த சூப்பர் பதில்!
ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில் உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ளார்.
இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.
ப்ரின்ஸ் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நாளை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயன், டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது ஒரு ரசிகர், "ரிலாக்ஸ் ஆகணும்னா நீங்க உடனே பாக்க நினைக்கற ஆல் டைம் ஃபேவரைட் படம் எது? - அல்லது - காட்சிகள் எது?" என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், "உள்ளத்தை அள்ளித்தா, சிவாஜி, வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
இயக்குனர் சுந்தர் சி இயக்கிய 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம், நடிகர் கார்த்தி, கவுண்டமணி, ரம்பா ஆகியோர் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும். சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & இயக்குனர் ஷங்கர் முதல்முறையாக இணைந்து பணிபுரிந்த திரைப்படம் ஆகும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
Also Read | ஜப்பானில் ராஜமௌலி - ராம் சரண் - Jr NTR.. மாஸ் காட்டப்போகும் RRR! ரிலீஸ் எப்போ?