PRINCE: அள்ளுதே..WHITE & WHITE -ல் SK & மரியா ரியாபோஷாப்கா.. செமயான ROMANTIC லிரிக் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE படத்தின்  லிரிக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தாவணியில் அசத்திய அதிதி ஷங்கர்.. நவராத்திரியை முன்னிட்டு பிரபல ஃபோட்டோ கிராபருடன் PHOTOSHOOT!

"டான்" படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகும் 'ப்ரின்ஸ்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிரபாகர் & அனந்த நாராயணன் வசனம் எழுதியுள்ளனர்.

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த   படத்தை தயாரிக்கின்றன.

இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். 

இந்த படத்தின்  'ஜெஸ்ஸிகா' எனும் இரண்டாவது சிங்கிள் பாடல்  சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமன் குரலில் இந்த பாடல் அமைந்துள்ளது. அறிவு இந்த பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. வெள்ளை நிற பின்னணியில் வெண்ணிற உடையணிந்து சிவகார்த்திகேயன் & மரியா ரியாபோஷாப்கா இந்த போஸ்டரில் தோன்றியுள்ளனர். தமிழ் & தெலுங்கில் இந்த போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 'ப்ரின்ஸ்' படம் வரும் தீபாவளிக்கு  ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் 'வலிமை' படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.  இந்த ப்ரின்ஸ் படம்  வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Also Read | மனைவியின் பிறந்தநாளுக்கு செம ட்ரீட் கொடுத்த அல்லு அர்ஜூன்! எங்க போயிருக்காரு பாருங்க

தொடர்புடைய இணைப்புகள்

Prince Hey Jessica Song Full Lyrics Poster SivaKarthikeyan

People looking for online information on Hey Jessica Song, Hey Jessica Song Full Lyrics Poster, Prince Movie, Prince Movie Updates, Sivakarthikeyan will find this news story useful.