கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன அதிபர் ஷி ஜினிபிங் தமிழ்நாடு வந்தார். அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஷி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்து உரையாடினர். அவர்களது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
மேலும், நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தை பற்றி சீன அதிபருக்கு சுற்றிக்காட்டினார். பின்னர் அவருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடல் குறித்த கவிதை அவரது கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதற்கு பல்வேறு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் விவேக், ''இயற்கைக்கு நன்றி செலுத்துவது கடவுளுக்கு நன்றி செலுத்துவது போன்றது. சிறப்பு. நரேந்திர மோடி சார், நன்றி மாமல்லபுரத்தின் உங்கள் கவிதைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நன்றி விவேக், மாமல்லபுரத்தின் கடற்கரை தோற்றம், காலை நேர அமைதி போன்றவையால் என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு சிறப்பான தருணமாக அமைந்ததது'' என்றார்.
இதன் ஒரு பகுதியாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் மொழி மீதான அவர் காதலை நாம் கொண்டாட வேண்டும் நன்றி சார்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மோடி, ''என் எண்ணத்தை உலகின் மிகப் பழமையான மொழியில் வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி. தமிழ் மொழி அழகானது. தமிழ் மக்கள் தனித்துவமானவர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.