ராஜூ சொன்ன ஒரு வார்த்தை!.. பேருந்து TASK-ல் இறங்கி ஓடிவந்த பிரியங்கா! எதுக்காக தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் ஃபினாலே ரேஸ் தொடங்கிவிட்டதாக அண்மையில் பிக்பாஸ் தெரிவித்திருந்தார். இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்காக ஆடி, பிக்பாஸ் வீட்டில் தங்களுடைய இருப்பை தக்க வைப்பதற்கு போராடி வருகின்றனர்.

prianka melted and quit bus task for pizza biggboss5
Advertising
>
Advertising

இதற்கென பல புதிய டாஸ்குகள் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதில் ஒரு புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி. போட்டியாளர்கள் ஒரு பேருந்தில் அமர்ந்துகொண்டுள்ளனர். அந்த பேருந்தில் இருந்து ஒருவரை பேசி கன்வின்ஸ் செய்து மற்ற போட்டியாளர்கள் இறக்கிவிடலாம். இது நாமினேஷனில் பாதிக்குமா என்பதை பற்றியெல்லாம் கவலையின்றி போட்டியாளர்கள் இதனை விளையாட்டாகவே பார்த்தனர். 

இதனை அடுத்து, அனைவரும் பேருந்தில் இருந்துகொண்டிருந்தபோது பேருந்தை விட்டு முன்னதாக வெளியேறிய ராஜூ, வருண், சஞ்சீவ் உள்ளிட்டோருக்கு பிக்பாஸ் ஒரு பீட்சாவை அனுப்பி வைத்திருந்தார். சைவம், அசைவம் என இரண்டு விதமாகவும் இருந்த அந்த பீட்சாக்களை ராஜூ உள்ளிட்ட அவருடைய கேங்க் சாப்பிடத் தொடங்கியது.

அப்போது பேருந்தில் இருப்பவர்களிடம் இந்த பீட்சாவை காட்டி அவர்களை இவர்கள் அழைத்தனர். குறிப்பாக ராஜூ,  அபினய்யிடம் எவ்வளவோ சொல்லி கேன்வாஸ் செய்தார். அபினய் கிட்டத்தட்ட இறங்கி வந்து விடுவார் போல் மனம் மாறினார். ஆனால் கடைசி நேரத்தில் ராஜூவை போயா என்று தள்ளிவிட்டு உறுதியாக நின்றார்.

எனினும் இந்த மன உறுதியில் இருந்து தளர்ந்து விட்டார் நம் விஜே பிரியங்கா. ஆம், பிரியங்கா என்றாலே அவர் எந்த அளவுக்கு ஒரு உணவு பிரியர் என்பதை அவரே பிக்பாஸ் வீட்டில் பலமுறை சொல்லியிருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரிந்தது. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் பிரியாணி மற்றும் பீட்சாவுக்கு மிகப்பெரிய பஞ்சம் இருப்பதாக பிரியங்கா அவ்வப்போது தன் ஹவுஸ்மேட்ஸிடம் சொல்லி வருத்தப்படுவதுண்டு.

இதனிடையே பிரியங்காவின் வருத்தத்தைப் போக்கும் அளவுக்கு, பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த பீட்சாவை தன்னால் சாப்பிட முடியவில்லையே என்கிற ஏக்கத்துடன் பிரியங்கா பேருந்தில் இருந்து கொண்டே இருந்தார். எனினும் ராஜூ உள்ளிட்ட அனைவரும் பிக்பாஸ் அனுப்பி வைத்த அந்த பீட்சாவை சாப்பிடுவதை பேருந்துக்குள் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரியங்கா.

பின்னர் ஒருவழியாக, தாளமுடியாமல் பேருந்தில் இருந்து இறங்கி ஓடி வந்து விட்டு பிக்பாஸ், சாப்பிட சொல்லி அனுப்பி வைத்த அந்த பீட்சா சாப்பிடும் ஹவுஸ்மேட்ஸின் ஜோதியில் ஐக்கியமானார். தான் ஒரு எமோஷனல் பெர்சன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பிரியங்கா, அன்பால் தன்னை வென்று விடலாம் என்று அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Prianka melted and quit bus task for pizza biggboss5

People looking for online information on Biggboss finale, Biggboss5 tamil, BiggBossTamil5, Bus task, Kamal Haasan, Kamal hassan, Priyanka, Vijay tv will find this news story useful.