சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆகிறாரா மொரட்டு சிங்கிள் நடிகர்? செம்ம காம்போ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் SK 20 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.

Advertising
>
Advertising

ப்பா… என்னா ஸ்டைலு!- ரசிகர்களக் கவர்ந்த நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

டாக்டரும் – வருண் டாக்டரும்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம். டாக்டர் (Doctor) திரைப்படம் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் வெளியாகி அங்கேயும் ரசிகர்களைக் கவர்ந்தது. அதையடுத்து இப்போது முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நேரடியாக உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.

கவனம் ஈர்த்த இயக்குனர்

தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படம் ஜதி ரத்னலு. இந்த படத்தின் இயக்குனர் அனுதீப் கே.வி தான் தற்போது சிவகார்த்திகேயனின் 20 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

வில்லனாக பிரேம்ஜி

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைவிட சர்ப்ரைஸாக படத்தொல் பிரேம்ஜி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுவரை நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்தில் பிரேம்ஜி சிம்புவுடன் இணைந்து நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் டான்

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படம் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இணைந்த தர்மதுரை கூட்டணி… மாமனிதன் ரிலிஸ் அப்டேட் கொடுத்த ஆர் கே சுரேஷ்

தொடர்புடைய இணைப்புகள்

Premji surprise role in Sivakarthikeyan next movie

People looking for online information on Don Movie, Premji, Premji Amaran, Sivakarthikeyan, SK 20 will find this news story useful.