"படத்தில பெண்களை உஷார் செய்வது எப்படினு அசோக் சொல்லி தருவார்" - மன்மதலீலை பற்றி பிரேம்ஜி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான், "மன்மதலீலை".  இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

Advertising
>
Advertising

2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. Rockfort Entertainment சார்பாக கிரியேடிவ் புரொடுயுசர் K.B.ஶ்ரீராம் அனைவரையும் வரவேற்றார்.

ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் பேசியதாவது…

கேமராமேன் தமிழ் A அழகன் என் உதவியாளர் தான். மிக நல்ல பையன். அவரது லீலைகளையே ஒரு படமாக எடுக்கலாம். வெங்கட் பிரபு ஒளிப்பதிவாளரை ஈஸியாக வைத்து கொள்வார். இசை நன்றாக இருக்கிறது. படமும் அழகாக வந்துள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது….

திரைக்கதையில் அசத்தகூடியவர்களில் சமீப காலத்தில் வெங்கட் பிரபுவை மிஞ்சும் வேறொருவர் இல்லை. மாநாடு படத்தில் அந்தளவு அசத்தியிருப்பார் அதே போல் இந்தப்படத்திலும் மிக வித்தியாசமாக அசத்தியுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு அனைவரும் திரைக்கதைக்காக வெங்கட் பிரபுவை பாராட்டுவார்கள். எல்லோருக்கும் லாபம் தந்த படம் மாநாடு, அதே போல் இந்த படமும் வெற்றி பெறும் நன்றி.

நடிகர் நிதின் சத்யா பேசியதாவது…

இந்தப்படம் நான் பார்த்து விட்டேன் இது அடல்ட் படம் கிடையாது. இது வெங்கட் பிரபுவின் விருந்தாக இருக்கும். அசோக் செல்வனை பார்த்து பொறாமையாக உள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும்.

இசையமைப்பாளர் பிரேம்ஜி பேசியாதாவது…

அண்ணன் படத்திற்கு நான் இசையமைத்து படம் ரிலீஸாவது மகிழ்ச்சி. கல்யாணமான அனைவரும் பார்க்க வேண்டிய படம், 2010 லும் 2020 லும் நடக்க கூடிய கதை. படத்தில் பெண்களை உஷார் செய்வது எப்படி என அசோக் சொல்லி தருவார்.  எல்லோரும் பார்க்கக்கூடிய படம். எங்க அண்ணனுக்கு பயங்கரமான மூளை. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த படத்தில் நிறைய க்ளாப்ஸ் கிடைக்கும். படத்தை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் பேசியதாவது…

இந்தப்படத்திற்கு என்னை அழைத்த போது நான் பொதுவாக சினிமா விழாக்களுக்கு வருவதில்லை என மறுத்தேன், நடிகர் சங்கத்திற்கு நிதி அளிப்பதாக சொன்னார்கள் நடந்தே வருகிறேன் என்றேன். இந்தப்படம் எல்லோரும் நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் இது அடல்ட் படம் அல்ல, வெங்கட் பிரபு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் தம்பியுடன் இணைந்து நல்ல படங்கள் தந்து வருகிறார். இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Premji Amaren about his brother Director Venkat Prabhu

People looking for online information on Manmadha Leelai, Premji amaren, Venkat Prabhu will find this news story useful.