நடிகையுடன் செல்ஃபி எடுத்த எஸ்.ஜே. சூர்யா.. உடனே கமெண்ட்டோட வந்த 'பிரேம்ஜி'.. யாருயா இவரு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனராக இருந்து, தற்போது முழு நேர நடிகராக மாறி தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் எஸ்.ஜே. சூர்யா.

premgi comment on sj suryah pic with kalyani priyadarshan
Advertising
>
Advertising

நிறைமாத கர்ப்பத்துடன் நீச்சல் உடையில் காஜல் அகர்வால்... கணவருடன் வெளியிட்ட போட்டோஸ்

கடைசியாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த 'மாநாடு' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் எஸ்.ஜே. சூர்யா. இந்த படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அதே போல, எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பும், ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

மீம்ஸ் வீடியோக்களிலும் 'வைரல்'

அதிலும் குறிப்பாக, எஸ்.ஜே. சூர்யா பேசும் பல வசனங்கள் மற்றும் வீடியோக்கள், மீம்ஸ் வீடியோக்களிலும் அதிகம் வைரலாக தொடங்கி இருந்தது. அவர் சொல்லும் 'தலைவரே தலைவரே' என்ற காட்சியை பல மீம்ஸ்களில் நாம் ரசித்திருப்போம். இந்நிலையில், நடிகை கல்யாணி பிரியதர்ஷனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், எஸ்.ஜே சூர்யா பகிர்ந்திருந்தார்.

கல்யாணி பிரியதர்ஷன்

"வணக்கம் கல்யாணி. இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்வதில் மகிழ்ச்சி. நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறீர்கள். அதிகம் வொர்க் அவுட் செய்து, உங்களை ஃபிட்டாகவும் வைத்துள்ளீர்கள். பேன் இந்தியா படங்களில் நடிக்கவும், பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் ஜோடி சேர சரியான தருணம். மாநாடு லக்கி சார்மிற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

'தலைவரே தலைவரே'

இதற்கு நடிகர் பிரேம்ஜி, 'தலைவரே தலைவரே' என்ற எஸ்.ஜே. சூர்யாவின் வசனத்தையே கமெண்டில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, எஸ்.ஜே. சூர்யாவும், "உங்களை மிஸ் செய்தோம்" என சொல்ல, "நான் சென்னையில் இல்லை தலைவரே. விரைவில் நாம் இணைந்து கொண்டாடுவோம்" என்றும் பிரேம்ஜி குறிப்பிட்டிருந்தார்.

சமீபகாலமாக பிரேம்ஜி

இறுதியில், எஸ்.ஜே. சூர்யாவும், "நிச்சயமாக" என குறிப்பிட்டிருந்தார். பொதுவாக, தமிழ் நடிகைகள் பகிரும் புகைப்படங்கள் கீழ், நடிகர் பிரேம்ஜி ஏதாவது கமெண்ட்டுகளை பதிவிடுவதை, சமீபகாலமாக மிகவும் ஜாலியான ஒரு வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், கல்யாணியுடன் எஸ்.ஜே. சூர்யா இருக்கும் புகைப்படம் குறித்த பிரேம்ஜியின் கமெண்ட்டும், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மாலத்தீவில் தமன்னா.. முதல் முறையாக பிகினி, டூ பீஸ் நீச்சல் உடை.. தீயாய் பரவும் வீடியோ!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Premgi comment on sj suryah pic with kalyani priyadarshan

People looking for online information on Kalyani Priyadarshan, Premgi, Premgi Amaren, Premgi comment, Sj suryah will find this news story useful.