மன்மதலீலை சிங்கிள்: ”நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா”… அனிருத்துக்கு ஐஸ் வைத்த பிரேம்ஜி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் பிரேம்ஜி இசையமைத்துள்ள மன்மதலீலை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

துல்கர், காஜல், அதிதி நடிச்ச “ஹே சினாமிகா” ஓடிடியில்.. வெளியான ரிலீஸ் தேதி ரிலீஸ் தேதி

இளைஞர்களைக் கவரும் மன்மதலீலை

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட்  மற்றும் ஜெயப்பிரகாஷ்  உள்ளிட்ட பலர் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இளைஞர்களை முழுக்க முழுக்க கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மாதிரி படம் கிடையாது…

இந்த படம் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு ‘என்னுடைய உதவியாளர் மணிவண்ணன் எழுதிய கதை இது. கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என நினைத்த போது இந்தக் கதை வந்தது. அருமையான கதை. அசோக்கை கொரோனா நேரத்தில் சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி’ என ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

பர்ஸ்ட் சிங்கிள்…

இந்த படத்தின் ரிலீஸூக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இதுவரை படத்தின் பாடல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘வா கணக்கு’ என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட உள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பாடலின் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அறிவிப்பை வெளியிட்டு அனிருத்துக்கு நன்றி சொல்லும் விதமாக ‘நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே எனக்கு’ என்ற பாடலை இணைத்துள்ளார். பிரேம்ஜியின் இந்த ஸ்டேட்டஸ் இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

#Willsmithassault: "இதான் தைரியம்... உங்க ரசிகைங்குறதுல பெருமை"… வனிதா போட்ட வைரல் பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Premgi amaren jolly status to anirudh Manmatha Leelai single

People looking for online information on Anirudh, Manmatha Leelai, Manmatha Leelai Single, Premgi Amaren, Venkat Prabhu will find this news story useful.