"மாநாடு படம் எனக்கு புடிக்கல.." வெங்கட் பிரபுவை குறிப்பிட்டு பிரேம்ஜி போட்ட ட்வீட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு திரைப்படம் குறித்த மீம்ஸ் வீடியோவை பிரேம்ஜி அமரன் பகிர்ந்துள்ள நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

கடந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில், மிகச் சிறந்த திரைப்படம் என்ற பெயரை 'மாநாடு' திரைப்படம் பெற்றிருந்தது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரின் நடிப்பில், கடந்த நவம்பர் மாத இறுதியில் 'மாநாடு' திரைப்படம் வெளியாகியிருந்தது.

சிறப்பான படைப்பு

டைம் லூப் என்ற சற்று குழப்பம் அடையச் செய்யும் ஜானரைக் கையில் எடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு, மிக நேர்த்தியாக அனைத்து வகையிலான மக்களுக்கும் புரியும் வகையில், இந்த படைப்பினை உருவாக்கியிருந்தார். மேலும், இந்த திரைப்படத்தில், சிம்பு மற்றும் வில்லனாக நடித்த எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. இசை, எடிட்டிங், கேமரா உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது.

மைல்கல்

அது மட்டுமில்லாமல், இந்த படம் 50 நாட்களைக் கடந்து, வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், நடிகர் சிம்புவின் நடிப்பில், அனைத்து தரப்பிலான மக்களைக் கவரும் வகையிலும், 'மாநாடு' உருவாக்கப்பட்டிருந்தது. அது மட்டுமில்லாமல், சிம்புவின் திரைப்பயணத்தில், 'மாநாடு' ஒரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.

பிரேம்ஜி பகிர்ந்த வீடியோ

இதனிடையே, வெங்கட் பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜி அமரன், மாநாடு திரைப்படம் குறித்து, ரசிகர் ஒருவர் பேசும் வீடியோவை வெளியிட்டிருந்தார். டைம் லூப் கதை என்றால், ஒரு விஷயம் நிறைவேறும் வரை, மீண்டும் மீண்டும் அது நடந்து கொண்டே இருக்கும். மாநாடு படத்திலும், நடிகர் சிம்பு இறந்த பின், அதே நாளில் தான் நிறைவேற்ற வேண்டிய செயலுக்காக, மீண்டும் மீண்டும் வந்து, கொண்டே இருப்பார்.

கமல்ஹாசனோடு இணைந்த சிவகார்த்திகேயன்! வெளியான தெறி மாஸ் புதிய அறிவிப்பு

மாநாடு பிடிக்கவில்லை

இதனைக் குறிப்பிட்டு அந்த வீடியோவில் பேசும் ரசிகர், 'கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மாநாடு திரைப்படம், எனக்கு பிடிக்கவில்லை. திரும்ப திரும்ப நடந்து கொண்டே இருப்பதால், தலைவலி தான் ஏற்படுகிறது. அதில் கதையே இல்லை' என கூறினார். உடனே, அந்த பேட்டியாளர், 'டைம் லூப் கதை என் கூறினார்களே' என கேட்க, 'என்னிடம் இது டைம் லூப் கதை என யாருமே கூறவில்லை' என அந்த ரசிகர் தெரிவிக்கிறார்.

வைரலாகும் வீடியோ

இதன் நடு நடுவே வெங்கட் பிரபு சோகத்தில் இருக்கும் மீம்ஸ் வீடியோக்களையும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பகிர்ந்த பிரேம்ஜி அமரன், 'வெங்கட் பிரபுவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பைப் பெற்ற மாநாடு திரைப்படம் பற்றி, ரசிகர் பேசும் வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல் அடி... ஜெயிச்சாப்புறம் trophy-யுடன் கெத்து காட்டும் ராஜூ?.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

Premgi amaran shares meme video about maanadu movie

People looking for online information on பிரேம்ஜி, மாநாடு, வெங்கட் பிரபு, Maanadu movie, Premgi, Premgi Amaran will find this news story useful.