நிவின் பாலி - நஸ்ரியா இணைந்து நடித்து தமிழ் - மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரு சேர வெளியான 'நேரம்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்ரன். அதனைத் தொடர்ந்து அவர் நிவின் பாலி, சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் அவர் இயக்கிய 'பிரேமம்' படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
ஒரு இளைஞரின் மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழும் காதல் குறித்து பேசப்பட்ட அந்த படம் மலையாளத்தை தாண்டி தமிழ் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது. மேலும் இந்த படம் தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவரது அடுத்த படம் குறித்து எதிர்பாரப்பு இருந்த நிலையில் அவர் சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் எனது அடுத்த படம் பாட்டு (Song). ஃபகத் ஃபாசில் ஹீரோவா நடிக்கிறார்.
இந்த படத்தை யுஜிஎம் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த முறை நான் இந்த படத்துக்கு நான் இசையமைக்கவும் செய்கிறேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.