"புருஷன் தலையெழுத்து எப்படி மாறப்போதோ தெரில!".. பிக்பாஸ்க்கு சென்ற சஞ்சீவின் மனைவி!! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல சின்னத்திரை நடிகர்கள் சஞ்சீவ் மற்றும் அவரது மனைவி பிரீத்தி.

Advertising
>
Advertising

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருமே சின்னத்திரைகளில் நடித்து வருகிறார்கள். நடிகர் சஞ்சீவ் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீர் சர்ப்ரைஸாக சஞ்சீவ், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சஞ்சீவ் தயாராகும் வீடியோவை தமது இன்ஸ்டாகிராமில் சஞ்சீவின் மனைவி பிரீத்தி, பகிர்ந்திருந்தார். அதில் பேசிய சஞ்சீவ், “எல்லாருமே நல்லா கேம் விளையாண்டுகிட்டு இருக்காங்க. அந்த வீட்டுல நான் நானா தான் இருக்க விரும்புறேன். எனக்கு கோவம் வரும். எல்லாருக்கும் இருக்குற மாதிரியே. அதாவது பாசத்த காட்டினா பாசத்த காட்டுவேன். கோவத்த காட்டுனா கோவத்த காட்டுவேன். நான் கண்ணாடி மாதிரி” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல் பிரீத்தி குறிப்பிடும்போது, “என் புருஷன நான் இங்க ரசிக்குற மாதிரியே அங்கயும் ரசிக்கணும்னு நெனைக்கிறேன். ஆனா எப்படி தலையெழுத்து மாறப்போகுதோ தெரியல” என குறிப்பிட்டிருந்தார்.  சஞ்சீவின் ரசிகர்கள், அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி ஆனது குறித்து பாசிடிவாக பேசி கமண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

"புருஷன் தலையெழுத்து எப்படி மாறப்போதோ தெரில!".. பிக்பாஸ்க்கு சென்ற சஞ்சீவின் மனைவி!! வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Preethi viral comment Over Sanjeev entry in biggbosstamil5

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Preethi Sanjeev, Sanjeev will find this news story useful.