பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்'.. படத்தில் இணைந்த பிரபு தேவா & விஜய் சேதுபதி! அதிரடி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | மறைந்த நா. முத்துக்குமார் வரிகளால் உருவான 'அநீதி' படத்தின் முதல் சிங்கிள்..

நடிகர் பிரசாந்த் நடிப்பில் 'அந்தகன்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை அவரின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்குகிறார். இந்த படம். கடந்த 2018 ஆம் ஆண்டு,  ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.

இந்த படத்தில், பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா நடிக்கின்றனர். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். படத்துக்கு தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படத்தின் டப்பிங், பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை கலைப்புலி தாணுவின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதற்கான அறிவிப்பை படக்குழு  சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.  அதன்படி இந்த படம் விரைவில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் கைப்பற்றி உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் வெளியாக உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின்  இறுதிகட்ட காட்சிக்காக “டோர்ரா புஜ்ஜி” என்ற பாடலை ராக்ஸ்டார் அனிருத் மற்றும் மக்கள் செல்வன் விஜயசேதுபதி இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு நடனம் அமைத்து இயக்க நடனபுயல் பிரபுதேவா இசைந்துள்ளார். பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் 50 நடன கலைஞர்கள் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாடல் காட்சி படமான உடனே அந்தகன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அந்தகன் படத்தை கலைப்புலி S தாணு அவர்கள் உலகமெங்கும் திரையிட திட்டமிட்டு வருகிறார்.

Also Read | இந்தியன் 2 படத்தில் யுவராஜ் சிங்கின் தந்தை.. அவரே வெளியிட்ட வேறவெவல் BTS PHOTOS!

தொடர்புடைய இணைப்புகள்

Prashanth Andhagan Movie Dorra Bujji Song Update

People looking for online information on Andhagan movie, Anirudh, Dorra Bujji Song Update, Prabhu Deva, Prashanth, Vijay Sethupathi will find this news story useful.