தமிழ் சினிமாவில், 90-களின் காலகட்டங்களில் இருந்தே முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் 'டாப் ஸ்டார்' பிரசாந்த்.
தொடர்ந்து, தற்போது தங்களின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில், அந்தகன் என்னும் படத்தில் நாயகனாக பிரசாந்த் நடித்து வருகிறார்.
விரைவில் அந்தகன்..
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி இருந்த திரைப்படம் அந்தாதூன். இதனை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இதன் தமிழ் ரீமேக் தான் 'அந்தகன்'. இதனை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து இயக்கி வருகிறார்.
பிரசாந்த்துடன், இந்த படத்தில், கார்த்திக், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு, பிரியா ஆனந்த், கே.எஸ். ரவிக்குமார்,வனிதா உள்ளிட்ட பலர், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில், இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் சில பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்திருந்தது.
இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் தம் பிறந்த நாளையொட்டி தமது ரசிகர்களை சந்தித்த பிரத்தியேக நிகழ்வு பிஹைண்ட்வுட்ஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் இணைய வழியில் தோன்றி நடிகைகள் பூர்ணா, மதுபாலா, சங்கவி பிரியாமணி உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து பிரசாந்த் பற்றி தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் முன்னிலையில் பிரசாந்த் மற்றும் சினேகா இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
லண்டன்'ல கோழி சூப்..
அப்போது பிரசாந்த் பற்றி நடிகை சினேகா முதலில் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய பிரசாந்த், "சினேகா சொன்னதுபோல் விரும்புகிறேன் திரைப்படத்தில் அவர் முதன்முதலில் என்னுடன் நடித்தார். எங்களுடைய நட்பும் சரி, திரைப்பயணமும் சரி, வித்தியாசமான அனுபவங்கள் கொண்டது. லண்டன் தெருவில் நாங்கள் கோழி சூப் வைத்தோம் என்றால் நம்ப முடிகிறதா?" என்று கலகலப்பாக பேசத் தொடங்கினார் பிரசாந்த்.
தொடர்ந்து பேசியவர், "விரும்புகிறேன் திரைப்படத்தில் ஆட்டு மந்தைக்கு நடுவே ஒரு ரொமான்ஸ் சீன் நடந்தது. அப்போது ஆட்டின் அந்த சென்ட் (வாசனை), அவ்வப்போது ஆடுகளின் இயற்கை உபாதை ஆகியவற்றுக்கு நடுவே நாங்கள் பண்ணிய ரொமான்ஸ் காட்சியை மறக்கவே முடியாது.
அந்தப் படத்தில் டைரக்டர் எங்களை கதைக்குள் கொண்டு சென்று நன்றாக வேலை வாங்கினார். அதன் பிறகும் கூட, அண்மையில் சினேகாவின் பிறந்தநாளுக்கு என்னை அழைத்தார். நான் அவ்வளவாக யார் பிறந்தநாளுக்கும் செல்ல மாட்டேன்.
பிறகு ஒரு காரணத்துக்காக அண்மைக்காலத்தில் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தேன். அதற்கு நான் பரிந்துரைத்ததும் சினேகாவைத்தான்" என்று சினேகாவுடனான தம்முடைய தொடர் நட்பைப் பற்றி விளக்கி இருந்தார் பிரசாந்த்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் விளையாட்டுகள் கொடுக்கப்பட்டன.