VIDEO: வாத்தி கம்மிங் .. 'திருமண விழாவில்' கலக்கிய பிரபல டான்ஸ் மாஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் பட்டையை கிளப்பிய படம் மாஸ்டர் திரைப்படம். பொங்கல் நேரத்தில் திரையரங்குகளிலும் பின்னர் அமேசான் ப்ரைமிலும் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

விஜயுடன் முதல்முறையாக விஜய் சேதுபதி இணைந்து நடித்ததுடன், வில்லனாக நடித்திருந்தது உள்பட படத்துக்கு பலம் கூடிக்கொண்டே போனது. தவிர மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மாநகரம், கைதி படங்களின் இயக்குநர் லோகேஷ் இயக்கினார். 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் உருவாக்கிய ட்ரெண்ட் இன்னும் குறையவில்லை. படம் வெளியாகும் முன்பே பாடல்கள் வெளியானாலும் படம் 50 நாட்களை கடந்து ஓடிவரும் நிலையிலும் பாடல்களின் பீட் குறையாமல் பலரும் கொண்டாடி வருகின்றனர். 

குறிப்பாக, திரை, விளையாட்டு பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிவந்தனர்.

இந்நிலையில் டான்ஸ் மாஸ்டர் பிரசன்னா திருமண விழாவில் மணமக்களுடன் ஆடும் வீடியோவும் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி65 படத்தில் நடித்துவருகிறார். 

ALSO READ: 'சூர்யா40 திரைப்படத்தின் தெறிக்கவிடும் ஸ்டில்.. பகிர்ந்த இயக்குநர்!'.. சூர்யாவின் வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Prasanna Master Dance for Vaathi Coming Trending Video

People looking for online information on Lokesh Kanagaraj, Master, Prasanna Master, Trending, Video, Vijay, Viral will find this news story useful.