பதான் படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. தீபிகா படுகோனேக்கு ஆதரவாக ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பதான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வீடியோ குறித்து தீபிகா படுகோனேக்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் டிவீட் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இந்திய டூரின் முக்கிய தருணங்கள்.. பாடகி பிரகதி பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சில ஆண்டுகளுக்கு முன் ஷாருக்கான், 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படத்தில் நடிக்க கமிட் ஆனார். 

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 2023 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமாக உருவாகும் இந்த படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆக உள்ளது.


இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் Besharam Rang வீடியோ வடிவில் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. இதுவரை காணாத லுக்கில் ஷாருக்கான் & தீபிகா படுகோனே இருவரும் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். விஷால் & சேகர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளனர். குமார் & விஷால் தட்லானி பாடல் வரிகளை எழுதி உள்ளனர். சில்பா ராவ், விஷால், கராலிசா மோன்டெய்ரோ இந்த பாடலை பாடியுள்ளனர்.

இந்த பாடலில் நடிகை தீபிகா படுகோனே, ஆரஞ்சு நிற உடையில் தோன்றியுள்ளது சர்ச்சை ஆனது. இந்நிலையில் தீபிகா படுகோனேக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் "வெறுக்கத்தக்கது ..எவ்வளவு காலம் நாம் இவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும் ..நிற குருடு" என டிவீட் செய்துள்ளார்.

Also Read | "சந்தோசத்தின் குவியலை தரப்போகும்".. அட்லி - பிரியா தம்பதி சொன்ன குட் நியூஸ்.. !

தொடர்புடைய இணைப்புகள்

Prakash Raj Supports Deepika Padukone Over Pathaan Besharam

People looking for online information on Deepika Padukone, Pathaan, Pathaan Besharam, Pathaan Besharam Song, Prakash Raj will find this news story useful.